அஜித் துபாயில் செட்டிலாக இருக்கிறார் என்ற தகவல் தான் தற்போது இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. கோலிவுட்டில் 90 காலகட்டத்தில் தொடங்கி தற்போது வரை தனது உழைப்பினால் உயர்ந்து அல்டிமேட் ஸ்டார் என்ற அந்தஸ்துடன் திகழ்ந்து கொண்டு இருப்பவர் அஜித். இவர் திரைப்படங்களில் நடிப்பது மட்டும் இல்லாமல் துப்பாக்கி சுடுதல் , கார் மற்றும் பைக் ஓட்டுவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டவர். அதற்காக இவர் பல விருதுகளையும் வாங்கியிருக்கிறார்.

மேலும், இவருடைய நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும், அதிக வசூலையும் பெற்று இருக்கிறது. அந்த வகையில் கடைசியாக அஜித் நடிப்பில் வெளியான படம் துணிவு. இந்த படத்தை இயக்குனர் எச் வினோத் இயக்கி இருந்தார். இப்படத்தில் மஞ்சு வாரியார், சமுத்திரக்கனி, சதிஷ், பாவனி, அமீர் போன்றவர்கள் நடித்திருந்தார்கள். மேலும், இந்த படத்தை ரெட் ஜெயின்ட்ஸ் நிறுவனம் திரையரங்குளில் வெளியிட்டது.

Advertisement

துணிவு படம்:

இப்படம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இதனை அடுத்து அஜித் அவர்கள் ஏகே 62 என்ற படத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை முதலில் விக்னேஷ் சிவன் தான் இயக்க இருந்தது. அதற்கான அறிவிப்புகள் எல்லாம் வெளியாகியிருந்தது. பின் இந்த படத்தில் இருந்து விக்னேஷ் சிவன் விலகிவிட்டார் என்று கூறப்பட்டது. அதன் பின் அஜித்தின் ஏகே 62 படத்தை இயக்குனர் மகிழ்திருமேனி இயக்க இருப்பதாக அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியானது.

விடா முயற்சி படம்:

அது மட்டும் இல்லாமல் இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார். மேலும், நடிகர் அஜித்தின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த படத்தின் விடா முயற்சி என்று பெயரிடப்பட்ட போஸ்டர் வெளியாகி இருந்தது. இந்த படம் பயணம் சார்ந்த கதையாக இருக்கும் என்று ரசிகர்கள் கூறுகின்றனர். அதோடு இந்த படத்தில் முதல் முறையாக அஜித் பாட இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த படத்திற்காக அஜித் அவர்கள் லண்டனில் வெளிநாட்டு பிட்னஸ் பயிற்சியாளர்கள் மேற்பார்வையில் உடல் எடையை குறைத்து ஸ்லிம்மாகி வருகிறார்.

Advertisement

படம் குறித்த தகவல்:

இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. மேலும், இந்த படத்தின் முதற்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக சோசியல் மீடியாவில் தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆக்சனும் எமோஷனலும் கலந்த படமாக இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தில் நடிக்க திரிஷா, தமன்னா, சஞ்சய் தத் , அர்ஜுன் தாஸ் போன்ற பல பேரிடமும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அக்டோபரில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது.

Advertisement

விடாமுயற்சி படப்பிடிப்பு குறித்த தகவல்:

இந்த நிலையில் அஜித் துபாயில் செட்டில் ஆகி விட்டார் என்றும் லண்டனில் வீடு பார்த்து குடியேறுகிறார் என்ற செய்திகள் சோசியல் மீடியாவில் உலா வருகிறது. காரணம், அஜித் மகள் அனோஷ்கா தற்போது பதினொன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறார். அடுத்த ஆண்டு இவர் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எழுத இருக்கிறார். படிப்பு முடிந்த உடனே சிறந்த கல்லூரியில் சேர்ப்பதற்காக அஜித் விசாரித்து வருவதாகவும் இங்கிலாந்து உட்பட சில நாடுகளில் உள்ள டாப் 10 கல்லூரிகளில் விசாரித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இதனால் இவர் தன்னுடைய மகளின் படிப்பிற்காக துபாயில் செட்டிலாக இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால், தற்போது அஜித் சென்னையில் தான் இருக்கிறார். துபாயில் படப்பிடிப்பு தொடங்கினாலும் கூட சென்னையில் இருந்து தான் அவர் செல்வதாக கூறப்படுகிறது.

Advertisement