Facebook-இல் தனது பெயரை தவறாக பயன்படுத்துவோருக்கு அஜித் எச்சரிக்கை

By ·
அனுமதியின்றி அஜித் அவர்களின் பெயரையோ புகைப்பதையோ பயன்படுத்த கூடாது என அஜித் அவர்களின் வழக்கறிஞர் அறிக்கையில் தெரிவித்துள்ளார். அஜித் பெயரால் செயல்படும் சமூக வலைத்தள பக்கங்கள், திரையுலக பிரமுகர்கள், பத்திரிகையாளர்கள், விமர்சகர்களை கேலி செய்வதாக வந்த தகவல்களை தொடர்ந்து அஜித் தரப்பு வழக்கறிஞர் இவ்வாறு ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். நடிகர் அஜித் எந்த ஒரு அரசியல் கட்சியையும் சாராதவர். தன்னுடைய அரசியல் படிப்பினைகள் அடிப்படையில் அவர் வாக்களித்து வருகிறார். அவர் தனது அரசியல் கருத்துக்களை பொதுவெளியிலோ அல்லது தனது ரசிகர்கள் உள்ளிட்ட யாரையும் பாதிக்கும் வகையிலோ தெரிவித்ததில்லை என்று அந்த அறிகிலேயில் குறிப்பிட்டுள்ளது.
Tamil Behind Talkies AMP · Quick view
View full