மாஸ்டர் படத்தை பார்த்துவிட்டு அஜித்தின் ரேஸ் தோழி போட்ட ட்வீட் - சாந்தனு பற்றி என்ன சொல்லியுள்ளார் பாருங்க.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த ஜனவரி 14 வெளியாகி இருந்தது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் எப்போதோ வெளியாக இருந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போயிக்கொண்டு இருந்த நிலையில் கடந்த ஜனவரி 14 ஆம் தேதி வெளியாகி இருந்தது.
https://twitter.com/alishaabdullah/status/1355421334373687298
தமிழகம் மட்டுமல்லாமல், அண்டை மாநிலங்கள் மற்றும் இந்திய அளவில் சினிமா ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த மாஸ்டர் வசூலிலும் சாதனை படைத்தது. 10 நாட்களில் உலகம் முழுவதும் 200 கோடி ரூபாய் வசூல் செய்தது. இப்படி ஒரு நிலையில் இந்த திரைப்படம் வரும் ஜனவரி 29 ஆம் தேதி இந்தியா உட்பட 240 நாடுகளில் வெளியாக இருப்பதாக அமேசான் நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.ஏற்கனவே கொரோனா அச்சம் காரணமாக திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டும் தான் அனுமதிக்கப்படுகின்றார்கள் என்பதால் திரையரங்க உரிமையாளர்கள் இந்த திரைப்படத்தை இன்னும் சில நாள் ஓட்ட திட்டமிட்டு வருகின்றனர்.
இப்படி ஒரு நிலையில் மாஸ்டர் திரைப்படத்தை OTT வெளியிட்டுள்ள முடிவு திரையரங்க உரிமையாளர்களை கொஞ்சம் அதிருப்த்தியில் ஆழ்த்தியுள்ளது.ஒரு பெரிய நட்சத்திரத்தின் படம் திரையரங்குகளில் வெளியான வெறும் 16 நாட்களில் வெளியாவது இதுவே முதல்முறை. இருப்பினும் மாஸ்டர் திரைப்படத்தை பல்வேறு பிரபலங்களும் OTTயில் கண்டு கழித்து வருகின்றனர். அந்த வகையில் அஜித்தின் கார் ரேஸ் தோழியான அலிஷா அப்துல்லா மாஸ்டர் திரைப்படத்தை பார்த்துவிட்டு ட்வீட் செய்துள்ளார்.
https://twitter.com/imKBRshanthnu/status/1355424173540089858
இதுகுறித்து அவர் பதிவிட்டுள்ள ட்வீட்டில், மாஸ்டர் படத்தை மீண்டும் பார்த்தேன். ஒட்டு மொத்த படக்குழுவிற்கும் பாராட்டுக்கள். குறிப்பாக விஜய் சார் மற்றும் விஜய் சேதுபதி சார் வசனங்களை சொல்ல வார்த்தை இல்லை. சாந்தனுவும் அவருடைய பகுதியை சிறப்பாக செய்துள்ளார். இந்த படம் வாழ்க்கையில் பட பாடங்களை கற்றுக்கொடுத்துள்ளது. இந்த படத்திற்கு நன்றி லோகேஷ் சார் என்று ட்வீட் செய்துள்ளார்.