முதல் மகனை தொடர்ந்து பிரம்மாண்டமாக நடக்கும் நாகார்ஜூனாவின் 2ஆவது மகன் திருமணம் - எங்கு? எப்போது தெரியுமா?
நாகார்ஜுனாவின் இளைய மகன் அகிலின் திருமணம் குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தெலுங்கு சினிமாவில் பல ஆண்டு காலமாக சூப்பர் ஸ்டாராக கலக்கி கொண்டு இருப்பவர் நாகார்ஜுனா. இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இவர் நடிகர் மட்டும் இல்லாமல் தயாரிப்பாளரும் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்து இருக்கிறார்.
மேலும், இவர் தெலுங்கில் தான் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். தற்போது இவர் ‘குபேரா’ படத்தில் நடித்து வருகிறார். இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் ஹீரோவாக தனுஷும், கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனாவும் நடிக்கிறார்கள். இதுவரை நாகார்ஜுனா நூற்றுக்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இது ஒரு பக்கம் இருக்க, நடிகர் நாகார்ஜுனாவுக்கு இரண்டு மனைவிகள். இவருடைய முதல் மனைவியை விவாகரத்து செய்து தான் இவர் இரண்டாவது திருமணம் செய்து கொண்டார்.
நாகார்ஜுனா குடும்பம்:
பிரபல தெலுங்கு நடிகர் வெங்கடேஷின் சகோதரி லட்சுமியை தான் 1984 ஆம் ஆண்டு நாகார்ஜுனா திருமணம் செய்திருந்தார். இவர்களுக்கு பிறந்தவர் தான் நாக சைதன்யா. பின் இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டினால் 1990 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். அதன் பின் நாகார்ஜுனா அவர்கள் பிரபல நடிகை அமலாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பிறந்த மகன் தான் அகில்.
நாகார்ஜுனா மகன்கள்:
மேலும், இவரின் இரண்டும் மகன்களும் தெலுங்கு மொழியில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டு இருக்கிறார்கள். இதற்கிடையில் நாக சைதன்யா- நடிகை சமந்தா கடந்த 2017 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். பின் இருவரும் பிரிய இருப்பதாக கடந்த 2021 ஆம் ஆண்டு சோசியல் மீடியாவில் அறிவித்து இருந்தார்கள். இவர்களின் பிரிவு ரசிகர்களுக்கு மட்டுமில்லாமல் பிரபலங்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நாக சைதன்யா-சோபிதா நிச்சயதார்த்தம் நாக சைதன்யாவின் வீட்டில் எளிமையாக நடந்தது.
நாக சைதன்யா- சோபிதா திருமணம்:
பின் இவர்களது திருமணம் ஹைதராபாத்தில் உள்ள நாகார்ஜுனாவுக்கு சொந்தமான அன்னப்பூரணா ஸ்டுடியோவில் டிசம்பர் மாதம் 4 ஆம் தேதி நடந்தது. இப்படி இருக்கும் நிலையில் நாகார்ஜுனாவின் இளைய மகனுக்கும் திருமணமாக இருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அகில் தெலுங்கு சினிமாவில் பிரபலமான நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கிறார். தற்போது இவர் Zainab Ravdjee என்பவரை தான் திருமணம் செய்ய இருக்கிறார். இவர் லண்டனை சேர்ந்தவர். இவர் ஒரு ஆர்டிஸ்ட் ஆவார்.
அகில் திருமணம்:
மேலும், கடந்த ஆண்டு நாகார்ஜுனா வீட்டில் தான் இரண்டு குடும்பத்தினர் முன்னிலையில் எளிமையான முறையில் அகில் நிச்சயதார்த்தம் நடந்தது. அகிலுக்கு ஏற்கனவே கடந்த 2016 ஆம் ஆண்டு ஸ்ரேயா என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. பின்னர் சில காரணங்களால் அகில் மற்றும் ஸ்ரேயா இடையே பிரேக் அப் ஆகி திருமணம் நின்றது. இந்நிலையில் அகிலுக்கு இந்த வருடம் மார்ச் 24ஆம் தேதி தான் திருமணம் நடக்கிறது. தற்போது அகிலின் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடந்திருக்கின்றது. இந்த திருமணம் பிரம்மாண்டமாக நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல் இவர்களுடைய திருமணமும் ஹைதராபாத்தில் உள்ள நாகார்ஜுனாவின் அன்னபூர்ணா ஸ்டுடியோவில் தான் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது.