கனவு இல்லத்தை கட்டிய ஆல்யா மானசா- சஞ்சீவ், கிரகப்ரவேச நிகழ்ச்சியில் பிரபலங்கள், குவியும் வாழ்த்துக்கள்

By subhashini · 13/6/2024

ஆல்யா மானசா- சஞ்சீவ் புதிதாக கட்டி இருக்கும் வீட்டின் கிரகப்பிரவேசம் புகைப்படம் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. சின்னத்திரையில் மிகப்பிரபலமான தம்பதிகளாக திகழ்பவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. இவர்கள் இருவருமே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ராஜா ராணி' தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்கள். இருவரும் இந்த சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார்கள்.

மேலும், இந்த சீரியலின் போதே இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பின் இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து சிறிய இடைவெளி எடுத்துக் கொண்ட ஆல்யா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த 'ராஜா ராணி 2' சீரியலில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் கலக்கி இருந்தார். அதேபோல் சஞ்சீவ் சன் டிவியில் பிரபலமாக சென்று கொண்டு இருக்கும் 'கயல்' சீரியலில் நடித்து வருகிறார்.

சஞ்சீவ் – ஆல்யா நடிக்கும் சீரியல்கள்:

அதற்கு பின் மீண்டும் நடித்து ஆல்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதோடு இவர்கள் தனியாக தொடங்கி இருக்கும் யூடுயூப் சேனலில் இவர்கள் வீடியோ பதிவிட்டு வருகிறார்கள். இவர்கள் பதிவிடும் வீடியோக்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. பின் மீண்டும் ஆலியா அவர்கள் சன் டிவியில் சரிகம புரொடக்ஷன் தயாரிக்கும் 'இனியா' தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இனியா சீரியல் குறித்த தகவல்:

இந்த சீரியல் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. முதலில் இந்த சீரியலை வேறொரு இயக்குனர் இயக்கியிருந்தார். தற்போது ஸ்டாலின் என்பவர் இயக்கி வருகிறார். இந்த சீரியலில் ஆல்யாவுக்கு ஜோடியாக ரிஷி நடித்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் டிஆர்பி ரேட்டிங் டாப்பிலும் இந்த சீரியல் வந்துவிட்டது.

ஆல்யா- சஞ்சீவ் வீடு:

இன்னொரு பக்கம், ஆல்யா, சஞ்சீவ் இருவரும் குடும்பம், குழந்தை, கேரியர் என்று பிசியாக இருக்கிறார்கள். அதோடு இவர்களிடம் நிறைய சொகுசு கார்கள் இருக்கிறது. இந்நிலையில் ஆல்யா மானசா- சஞ்சீவ் இருவரும் தனியாக கட்டியாக இருக்கும் வீட்டின் கிரகப்பிரவேச புகைப்படம் தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது. அதாவது, இவர்கள் ஏற்கனவே அப்பார்ட்மெண்ட் ஒன்றில் ஃபிளாட் ஒன்று வாங்கி இருக்கிறார்கள்.

https://www.youtube.com/watch?v=gUHcfjLL0wI

ஆல்யா- சஞ்சீவ் புது வில்லா புகைப்படம்:

அதுமட்டுமல்லாமல் சென்னையில் சொந்தமாக தனியாக வீடு ஒன்றை வாங்கி இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் வில்லா ஒன்றை கட்ட வேண்டும் என்பது தான் இவர்களுடைய கனவாக இருந்தது. தற்போது இந்த கனவை ஆல்யா-சஞ்சீவ் இருவருமே நிறைவேற்றி இருக்கிறார்கள். தற்போது இவர்கள் தாங்கள் கட்டி முடித்த வில்லாவுக்கு கிரகப்பிரவேசம் நடத்தி இருக்கின்றார்கள். இதில் சின்னத்திரை பிரபலங்கள் பலருமே கலந்துகொண்டு வாழ்த்துக்களை தெரிவித்திருக்கிறார்கள். தற்போது இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full