சின்னத்திரையில் மிகப்பிரபலமான தம்பதிகளாக திகழ்பவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. அதோடு இவர்கள் இந்த சீரியலின் மூலம் மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார்கள். மேலும், இந்த சீரியலின் போதே இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.

திருமணத்திற்கு பின் இவர்களுக்கு ஒரு அழகான பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்து சிறிய இடைவெளி எடுத்துக் கொண்ட ஆல்யா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த ராஜா ராணி 2 சீரியலில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் கலக்கி இருந்தார். அதேபோல் சஞ்சீவ் சன் டிவியில் பிரபலமாக சென்று கொண்டு இருக்கும் கயல் சீரியலில் நடித்து வருகிறார். அதற்கு பின் மீண்டும் கர்ப்பமான ஆல்யாவுக்கு ஆண் குழந்தை பிறந்து இருக்கிறது.

Advertisement

சஞ்சீவ் – ஆல்யா நடிக்கும் சீரியல்கள்:

அதோடு இவர்கள் தனியாக தொடங்கி இருக்கும் யூடுயூப் சேனலில் வீடியோ பதிவிட்டு வருகிறார்கள். இவர்கள் பதிவிடும் வீடியோக்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. பின் மீண்டும் ஆலியா அவர்கள் சன் டிவியில் சரிகம புரொடக்ஷன் தயாரிக்கும் இனியா தொடரில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த சீரியல் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இந்த சீரியல் தொடங்கிய நாளில் இருந்து தற்போது வரை நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

ஆலியா மானசா குடும்பம்:

முதலில் இந்த சீரியலை வேறொரு இயக்குனர் இயக்கியிருந்தார். தற்போது ஸ்டாலின் என்பவர் இயக்கி வருகிறார். இந்த சீரியலில் ஆல்யாவுக்கு ஜோடியாக ரிஷி நடித்து வருகிறார் அதுமட்டுமில்லாமல் டிஆர்பி ரேட்டிங் டாப்பிலும் இந்த சீரியல் வந்துவிட்டது. மேலும், ஆல்யா சீரியலில் பிசியாக இருந்தாலும் தன்னுடைய குழந்தைகளுடன் சேர்ந்து செய்யும் டான்ஸ், ரீல்ஸ் வீடியோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்.

Advertisement

ஆலியா மானசா பதிவிட்ட வீடியோ:

அந்த வகையில் தற்போது ஆலியா மானசா வெளியிட்டு இருக்கும் வீடியோ தான் சோசியல் மீடியாவில் சலசலப்பு ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, ஆலியா மானசா வெளியில் செல்லும்போது தன்னுடைய குழந்தைகளை கண்ட்ரோல் படுத்த நாய் சங்கிலி போடுவதற்கு பதிலாக தன்னுடைய துப்பட்டாவை இரண்டு குழந்தைகளின் கையிலுமே கட்டி இருக்கிறார்.

நெட்டிசன்கள் விமர்சனம்:

அதில் அவர், உங்கள் குழந்தைகளை கண்ட்ரோல் பண்ண இந்த மாதிரி செய்து பாருங்கள் என்று பதிவு போட்டு இருக்கிறார். இதை பார்த்த பலருமே ஆலியா மானசாவை திட்டியும் வறுத்து எடுத்தும் வருகிறார்கள். அதிலும் சிலர், உங்க குழந்தைங்க ரெண்டு பேரும் குறுக்கா ஓடுனா உங்களுக்கு சங்கு தான் என்றெல்லாம் விமர்சித்து இருக்கிறார்கள்.

Advertisement