சீரியல் நடிப்பை தாண்டி புது பிசினஸ் தொடங்கிய நடிகை ஆலியா மானசா - என்னன்னு நீங்களே பாருங்க

By subhashini · 23/12/2025

சின்னத்திரையில் மிகப்பிரபலமான தம்பதிகளாக திகழ்பவர்கள் சஞ்சீவ் – ஆல்யா. இவர்கள் இருவருமே விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ராஜா ராணி’ தொடரின் மூலம் தான் சின்னத்திரைக்கு அறிமுகமானவர்கள். இந்த சீரியலின் மூலம் இவர்கள் இருவருமே மக்கள் மத்தியில் தனெக்கென ஒரு இடத்தை பிடித்து இருக்கிறார்கள். மேலும், இந்த சீரியலின் போதே இவர்கள் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். திருமணத்திற்கு பின் இவர்களுக்கு ஒரு அழகான பெண், ஆண் குழந்தை பிறந்து உள்ளார்கள்.

சிறிய இடைவெளி எடுத்துக் கொண்ட ஆல்யா விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வெற்றிகரமாக முடிவடைந்த ‘ராஜா ராணி 2’ சீரியலில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் கலக்கி இருந்தார். அதேபோல் சஞ்சீவ் சன் டிவியில் பிரபலமாக சென்று கொண்டு இருக்கும் ‘கயல்’ சீரியலில் நடித்து வருகிறார். அதன் பின் ஆலியா அவர்கள் சன் டிவியில் சரிகம புரொடக்ஷன் தயாரித்த ‘இனியா’ தொடரில் நடித்து இருந்தார்.

ஆலியா மானசா குறித்த தகவல்:

இந்த சீரியல் சமீபத்தில் தான் முடிந்தது. தற்போது இவர் ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பாரிஜாதம் என்ற தொடரில் நடித்து வருகிறார். இப்படி இருவரும் பிசியாக நடித்து வந்தாலும் குடும்பம், குழந்தை, கேரியர் என்று பிசியாக இருக்கிறார்கள். அதோடு இவர்களிடம் நிறைய சொகுசு கார்கள் இருக்கிறது. மேலும், இவர்கள் ஏற்கனவே அப்பார்ட்மெண்ட் ஒன்றில் ஃபிளாட் ஒன்று வாங்கி இருக்கிறார்கள்.

View this post on Instagram

A post shared by alya_manasa (@alya_manasa)

ஆலியா மானசா தொழில்:

அதுமட்டுமல்லாமல் சென்னையில் சொந்தமாக தனியாக விலா ஒன்றை வாங்கி இருக்கிறார்கள். சமீபத்தில் தான் இவர்கள் தாங்கள் கட்டி முடித்த வில்லாவுக்கு கிரகப்பிரவேசம் நடத்தி இருந்தார்கள். அதன் பின் இவர்கள் சொந்தமாக போட் வாங்கி இருக்கிறார்கள். அதோடு இவர்கள் தனியாக தொடங்கி இருக்கும் யூடுயூப் சேனலில் வீடியோ பதிவிட்டு வருகிறார்கள். இவர்கள் பதிவிடும் வீடியோக்கள் எல்லாம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

ஆலியா மானசா புது பிசினஸ்:

இந்த நிலையில் ஆலியா மானசா புது பிசினஸ் தொடங்கி இருக்கும் தகவல் தான் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, ஆலியா மானசா அவர்கள் தன்னுடைய youtube பக்கத்தில் புதிய ஷோ ஒன்றை தொகுத்து வழங்க இருக்கிறார். அதற்கு வாட்ஸ் குக்கிங் என்று பெயரும் வைத்திருக்கிறார். இது தொடர்பான ஹோம் டூர் வீடியோவை அவர் வெளியிட்டிருந்தார். இந்த நிகழ்ச்சியில் பிரபலங்களை வீட்டிற்கு வரவைத்து சமைத்து கலகலப்பாக பேசுவது என்று கூறப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full