மீண்டும் சர்ச்சையை கிளப்பிய ஆடை படத்தின் புதிய போஸ்டர்.! வைரலாகும் புகைப்படம்.!
நயன்தாராவை தொடர்ந்து தற்போது பல்வேறு நடிகைகள் கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் லீட் ரோல் இருக்கும் படங்களில் நடித்து வருகின்றனர். அந்த வகையில் நடிகை அமலா பால் ராட்சசன் படத்தை தொடர்ந்து தற்போது ஆடை படத்தில் நடித்து வருகிறார்.
வைபவ் மற்றும் பிரியா பவானி சங்கர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான ‘மேயாத மான் ‘ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருந்தது. இந்த படத்தை அறிமுக இயக்குனரான ரத்ன குமார் என்பவர் இயக்கி இருந்தார். தற்போது இவரது இயக்கத்தில் ஆடை என்ற திரைப்படம் படமாக்கப்பட்டுள்ளது.
இதையும் பாருங்க : இயக்குனர் விஜய்யின் இரண்டாம் திருமண தேதி அறிவிப்பு.! பெண் யார் தெரியுமா.?
சமீபத்தில் இந்த படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகியுள்ளது. அதில் கிழிந்த ஆடையுடன் உடல் முழுவதும் ரத்தத்துடன் நின்றுகொண்டிருக்கிறார் நடிகை அமலா பால். இந்த புகைப்படம் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதோடு சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது.
கடந்த மாதம் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஒன்று வெளியாகி இருந்தது. அதில் அமலா பால் அரைகுறை ஆடையுடன் ரத்த வெள்ளத்தில் இருப்பது போன்று காட்சிபடுத்த பட்டது. இதனால் அந்த போஸ்டர் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதே போல சமீபத்தில் இந்த படத்தின் டீஸர் ஓன்றும் வெளியாகி இருந்தது.
அதில் அமலா பால் நிர்வாணமாக இருக்கும் காட்சிகளும் இடம்பெற்றிருந்தது. இந்த டீசரை கண்டு பலரும் அமலா பால் ஒரு போல்ட்டான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்று பாராட்டுகளை குவித்தனர். மேலும், இந்த டீசர் எதிர்பார்த்ததை விட அதிக பார்வையாளர்களால் பார்க்கபட்டது. இருப்பினும் இந்த டீசரில் நடிகை அமலா பால் ஆடை இல்லாமல் நடித்துள்ள காட்சி ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.