அமலாபாலுடன் விவாகரத்தான விஜய்க்கு இரண்டாவது திருமணம்..! பெண் யார்.? விவரம் இதோ

By Ajju · 5/7/2018
தமிழில் "மதராசபட்டினம்' , 'தெய்வ திருமகள்' போன்ற வெற்றி படங்களை இயக்கிவர் இயக்குனர் ஏ எல் விஜய். மேலும், இவர் இயக்கிய 'தெய்வ திருமகள், தலைவா' போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்த அமலா பாலுக்கும், ஏ எல் விஜய்க்கும் காதல் மலர்ந்தது. 2014 ஆம் நடைபெற்ற இவர்களது திருமணம் மூன்றே ஆண்டுகளில் விவகாரத்தில் முடிந்தது. இவர்கள் இருவருக்கும் ஏற்பட்ட மனஸ்தாபத்தினால் தான் இவர்கள் பிரிந்தனர் என்று கூறப்பட்டது. ஆனால், விவாகரத்திற்கு பின்னரும் இவர்கள் இருவரும் அவரவர் வேலைகளை செய்து வருகின்றனர். நடிகை அமலா பால் தற்போதும் தொடர்ந்து நடித்து வருகிறார். அதே போல இயக்குனர் ஏ எல் விஜய்யும் தொடர்ந்து பல படங்களை இயக்கிவருகிறார். இந்நிலையில் இயக்குனர் விஜய் இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. தற்போது விஜய்கு 39 வயதாகிறது இதனால் இவருக்கு இரண்டாம் திருமணம் செய்து வைக்க அவரது பெற்றோர்கள் முடிவெடுத்துள்ளாராம். மேலும், இயக்குனர் விஜய்யின் இரண்டாம் திருமணத்திற்கு பெண்ணை தீவிரமாக தேடி வருகின்றனராம். எனவே, இயக்குனர் விஜய்யின் இரண்டாம் திருமணம் குறித்த தகவல் விரைவில் வெளியகும் என்று எதிர்பார்க்கபடுகிறது. ஆனால், இது குறித்து இயக்குனர் விஜய் எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்கவில்லை.
Tamil Behind Talkies AMP · Quick view
View full