கல்யாணம் ஆகி 4 மாசம், கற்பமாகி 7 மாசம் - நிறைமாத வயிற்றுடன் அமலா பால் செய்த செயல்

By subhashini · 16/3/2024

கர்ப்பிணியாக இருக்கும் நடிகை அமலாபால் தன்னுடைய கணவருடன் பார்ட்டியில் ஆட்டம் பாட்டம் என்று
கொண்டாடிட்டு இருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் பிரபலமான நடிகையாக இருந்தவர் அமலா பால். தமிழில் மதராசபட்டினம், தெய்வ திருமகள் போன்ற வெற்றி படங்களை இயக்கிவர் இயக்குனர் ஏ எல் விஜய். இவர் இயக்கிய ‘தெய்வ திருமகள், தலைவா’ போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்தவர் அமலா பால்.

அதனை தொடர்ந்து இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். அதிலும் இவரின் ஆடை படம் மிக பெரிய அளவில் சர்ச்சையாகி இருந்தது. இதனிடையே அமலா பாலுக்கும் ஏ எல் விஜய்க்கும் இடையே காதல் மலர்ந்தது. பின் 2014 ஆம் ஆண்டு இவர்களது திருமணம் நடந்தது. திருமணம் ஆகி மூன்றே ஆண்டுகளில் இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து பெற்று 2017 ஆம் ஆண்டு இருவரும் பிரிந்தனர்.

அமலா பால் குறித்த தகவல்:

அதற்கு பின் இயக்குனர் விஜய், ஐஸ்வர்யா என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். அதேபோல் அமலா பால் தன்னுடைய கேரியரில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருகிறார். மேலும், கடந்த சில காலமாகவே அமலாபால் இரண்டாம் திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என்ற செய்திகள் கிசுகிசுக்கப்பட்டு வந்த வண்ணம் இருந்தது. அதற்கு ஏற்ப அமலா பால் பிரபல பாடகர் பவிந்தர் சிங் என்பவரை காதலித்து வருவதாக தகவல் வந்தது.

அமலா பால் இரண்டாம் திருமணம்:

அதோடு இருவரும் சேர்ந்து எடுத்து கொண்ட புகைப்படம் எல்லாம் அடிக்கடி வைரலானது. ஆனால், இருவரும் நண்பர்கள் தான் என்று கூறினார்கள். பின் அமலா பாலின் நெருங்கிய நண்பரான ஜெகத் தேசாய் என்பவர் கடந்த ஆண்டு அவருக்கு லவ் புரோபோஸ் செய்து இருந்தார். அந்த வீடியோக்கள் எல்லாம் படு வைரலாகி இருந்தது. அதை அடுத்து அமலா பால்-ஜெகத் தேசாய் இருவரும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார்கள்.

கர்ப்பம் குறித்து அறிவித்த அமலா பால்:

இப்படி ஒரு நிலையில் தான் கர்ப்பமாக இருப்பதாக தனது இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டு இருந்தார் அமலா பால். மேலும், அமலா பாலின் இந்த பதிவிற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தாலும் பெரும்பாலான நெட்டிசன்கள் ‘இப்போ தான கல்யாணம் ஆச்சி அதுக்குள்ளயா’ என்று ஷாக்காக கமண்ட் போட்டு இருந்தார்கள். தற்போது அமலா பால் ஏழாம் மாதம் கர்ப்பிணியாக இருப்பதாக அறிவித்திருக்கிறார்.

View this post on Instagram

A post shared by Amala Paul (@amalapaul)

அமலா பால் வீடியோ:

இதன் மூலம் இவர் திருமணத்திற்கு முன்பே கர்ப்பமாக இருப்பது தெரிகிறது. இந்த நிலையில் ஏழாவது மாதம் கர்ப்பமாக இருப்பதை ஒட்டி அமலா பால் பார்ட்டி வைத்து கொண்டாடி இருக்கிறார். தன் கணவரோடு பப்பில் அமலாபால் ஆட்டம் போட்டு பாட்டு பாடி கொண்டாடி இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் தன்னுடைய மனைவிக்கு லிப் லாக் முத்தம் ஜெகத் கொடுத்து இருக்கிறார். தற்போது இந்த வீடியோவை தான் அமலாபால் இணையத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full