Ps2 வெளியான வேலையில் குந்தவை (திரிஷா) லுக்கில் அமலா ஷாஜி வெளியிட்ட புகைப்படம் - கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்.

By Manikandan · 28/4/2023

சமீப காலமாகவே சோசியல் மீடியா அதிகளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் இன்ஸ்டாகிராம் பிரபலம் அடைவதற்கு 2K கிட்ஸ் தான் காரணம் என்று சொல்லலாம். கடந்த சில நாட்களுக்கு முன்னர் Ttf எனப்படும் யூடுயூப் பைக் ரேசருக்கு குவிந்த கூட்டத்தை கண்டு 90ஸ் கிட்ஸ்களை ஆச்சரியத்தால் ஆழ்த்தியது. அந்த வகையில் 2K கிட்ஸ்களின் பேவரட்டாக திகழ்பவர் அமலா ஷாஜி. பிரபல நடிகைகளை விட சோசியல் மீடியாவில் அதிக பாலோவர்ஸ் வைத்து இருக்கிறார் அமலா ஷாஜி.

தமிழ் சினிமாவில் இருக்கும் பல முன்னணி நடிகைகளை விட சமூக வலைதளத்தில் அமலா ஷாஜியை தான் ரசிகர்கள் அதிகம் பாலோ செய்கிறார்கள். பிரியங்கா மோகன் மட்டுமில்லாமல் ஐஸ்வர்யா மேனன், அதுல்யா ரவி என பல நடிகைகளை விட இன்ஸ்டாவில் அமலா ஷாஜியை ரசிகர்கள் அதிகம் பாலோ செய்கிறார்கள்.அதற்கு காரணம் இவருடைய கியூட்னஸ் ஓவர்லோடு தான் என்று 2k கன்னிஸ்கள் fire விட்டு வருகின்றனர்.

2kவை கவர்ந்த அமலா ஷாஜி :

இவர் கேரளாவை சேர்ந்தவர். டிக் டாக்கின் மூலம் அமலா ஷாஜி மக்கள் மத்தியில் அறிமுகமானார். ஆனால், டிக் டாக் தடை செய்யப்பட்டவுடன் இவர் இன்ஸ்டாகிராமில் தன்னுடைய வீடியோக்களை வெளியிட்டார். தற்போது இவரை மில்லியன் கணக்கான பாலோவர்ஸ் பாலோ செய்கிறார்கள். காலையில் முழிப்பதே அமலா ஷாஜியின் முகத்தில் தான் என்று சொல்லலாம். பின் இன்ஸ்டாகிராம், மோஜ், யூடியூபில் இவருடைய வீடியோக்கள் எல்லாம் கொடிகட்டி பறக்கிறது.

View this post on Instagram

A post shared by Amala (@_amalashaji_)

அதிலும் இவருடைய ஆட்டம், பாட்டம் என தரமான கன்டென்ட்களை உருவாக்கி தருகிறார். இப்போது வரை அது தான் அவருடைய ஸ்டைல். கற்பூரம் போல் ட்ரெண்டிங் ரீல்ஸ்களை கப் என்று பிடித்து வீடியோக்களாக வெளியிட்டு வருகிறார். இதனால் இவருக்கு லட்சக்கணக்கில் லைக்ஸ்குகளை குவித்து வருகிறார்கள். இவர் தன்னுடைய சகோதரி சேர்ந்து செய்யும் ரில்ஸ், சோலோ டான்ஸ், ரீகிரியேஷன், அம்மா அப்பாவுடன் ஃபேமிலி ரில்ஸ், பண்டிகைகளில் புதிய ஆடைகள், கடை விளம்பரம் என புது புது கான்சப்ட் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.

அதிமான ஹேட்டர்ஸ் :

அதிலும் அமலா ஷாஜியின் வசனம் 'அழுக ஒன்னும் வேணாம் ஓகே' என்பதுதான். ஏன்னா, சமீபத்தில் வெளியான இவருடைய வீடியோவை பார்த்த ரசிகர் ஒருவர் ஆனந்தத்தில் கண்கலங்கினார். அப்போது அமலா இந்த வசனத்தை சொல்லியிருந்தார். இந்த வீடியோ செம வைரலானது. அதிலிருந்து ரசிகர்கள் இவருடைய வசனத்தை தாரக மந்திரமாகவே வைத்துவிட்டார்கள். இவருக்கு கேரளாவில் மட்டுமில்லாமல் பல மாநிலங்களில் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதுவும் தமிழ் ரசிகர்கள் இவருக்கு எக்கச்சக்கம் என்றே சொல்லலாம்.

குந்தவை லுக்கில் அமலா :

என்னதான் இவருக்கு அதிக பாலோவர்கள் இருந்தாலும் அதே அளவு ஹேட்டர்ஸ்களும் இருக்கத்தான் செய்கின்றனர். ஆனாலும் அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் தொடர்ந்து தனது போட்டோ ஷூட் வித்தைகளை செய்து வரும் அமலா ஷாஜி, பொன்னியின் செல்வன் 2 வெளியாகி இருக்கும் நேரத்தில் குந்தவை திரிஷா கெட்டப்பில் புகைப்படம் வெளியிட்டுள்ளார். இதனை கண்டு காண்டான நெட்டிசன்கள் சிலர் 'குந்தவை மாதிரி இல்ல குந்தானி மாதிரி இருக்க' என்று கேலி செய்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full