கும்பகோணத்தில் அமரன் படத்திற்கு எதிராக விடுதலை தமிழ் புலிகள் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றிருக்கும் தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழகம் முழுவதும் அமரன் படத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தமிழ் சினிமா உலகில் நுழைந்த குறுகிய காலத்திலேயே கோடிகளில் சம்பளம் வாங்கும் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக சிவகார்த்திகேயன் திகழ்ந்து கொண்டு இருக்கிறார்.

தற்போது இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். இந்த படத்திற்கு அமரன் என்ற பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தை கமலஹாசன் ராஜ்கமல் நிறுவனம் தான் தயாரிக்கிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்து இருக்கிறார். ஏறக்குறைய தற்போது இந்த படத்தினுடைய படப்பிடிப்பு 80 சதவீதம் முடிவடைந்து இருக்கிறது. கடைசி கட்ட வேளையில் படத்தினுடைய வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றது.

Advertisement

அமரன் படத்தினுடைய டீசர்:

மேலும், இந்த படத்தை தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி போன்ற பல மொழிகளில் வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் இந்த படத்தினுடைய டீசர் சமீபத்தில் வெளியாகி இருக்கிறது. அதில் 44 ராஷ்ட்ரிய ரைபிள் படை பற்றிய வசனங்களும், தீவிரவாதிகளுடன் சண்டை காட்சிகளும் காட்டப்பட்டிருக்கிறது. இதன் மூலம் மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்று படத்தில் தான் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. மேலும், இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

திருச்சியில் போராட்டம்:

இப்படி இருக்கும் நிலையில் டீசரில் இடம் பெற்ற சில காட்சிகள் தான் தற்போது சோசியல் மீடியாவில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் நேற்று அமரன் படத்தை தடை செய்ய வேண்டும் என்று திருச்சியில் போராட்டம் நடத்தி இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் அந்தப் போராட்டத்தில் அமரன் படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன், தயாரிப்பாளர் கமலஹாசன், இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்றெல்லாம் கூறி இருக்கிறார்கள்.

Advertisement

போராட்டம் செய்ய காரணம் :

அதோடு அவர்களுடைய உருவ பொம்மைகளையும் சாலையில் எரிக்க முயன்று இருந்தார்கள். அப்போது போலீசார் இதை தடுத்து போராட்டக்காரர்கள் எல்லாம் கைது செய்து இந்தார்கள். இவர்கள் இப்படி போராட்டம் செய்வதற்கு காரணம் டீசரில் காஷ்மீர் மக்களையும், இஸ்லாமியர்களும் தீவிரவாதிகள் போல் சித்தரிக்கும் காட்சிகள் வந்திருக்கிறது என்றும் இந்தியாவில் ஒற்றுமையாக வாழும் இந்துக்கள்- இஸ்லாமியர்களிடையே பகையை உண்டாக்கும் வகையில் படத்தின் காட்சிகள் இருப்பதாகவும் கூறியிருக்கிறார்கள்.

Advertisement

விடுதலை தமிழ் புலிகள் கட்சி போராட்டம்:

இந்த நிலையில் கும்பகோணத்தில் விடுதலை தமிழ் புலிகள் கட்சி சார்பில் அமரன் படத்திற்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றிருக்கிறது. காஷ்மீர் மக்களை பயங்கரவாதிகளாக சித்தரித்தும்,பட்டியலினத்தவரை தரம் தாழ்த்தி படத்தில் விமர்சனம் செய்திருப்பதாக கூறி தயாரிப்பாளர் கமலஹாசன், நடிகர் சிவகார்த்திகேயன் உடைய உருவப்படங்களை எரித்து கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள். இதனால் 30 பேரை கும்பகோணம் போலீசார் கைது செய்து இருக்கிறார்கள். இப்படி அமரன் படம் குறித்த விவகாரம் தான் சர்ச்சையாகி இருக்கிறது.

Advertisement