விஸ்வாசம் படம் 50வது நாளுக்கு ஆப்பு வைக்கும் அமேசான்.! உச்சகட்ட கடுப்பில் ரசிகர்கள்.!

By Rajkumar · 19/2/2019

அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் கடந்த மாதம் 10 ஆம் தேதி வெளியான விஸ்வாசம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது அத்தோடு வசூல் ரீதியாகவும் பல்வேறு சாதனைகளை புரிந்து வருகிறது. இதுவரை வந்த அஜித் படத்திலேயே இந்த படம் தான் மிகப்பெரிய வெற்றி என்று கூறப்படுகிறது. 

https://twitter.com/PrimeVideoIN/status/1097451641500921857

விஸ்வாசம் படம் 6 வது வாரம் நெருங்கிய போதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. மேலும், தற்போது வரை தமிழகத்தில் மட்டும் இந்த படம் 150 திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த இந்த படத்தின் வெற்றி குறித்து படத்தின் விநியோகிஸ்தர் பேட்டி அளித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், விஸ்வாசம் படத்தின் வசூல் குறித்தும் , ஹிட் குறித்தும் எங்களிடம் ஒரு மில்லியன் கேள்விகள் கேட்டாலும் நாங்கள் சொல்வது ஒரே பதில்தான். தமிழ்சினிமாவின் ஒரே மாபெரும் வெற்றிப்படம் என்றால் அது விஸ்வாசம்தான் என்று ஆணித்தனமாக சொல்கிறார்.

https://twitter.com/dontlook4myname/status/1097458062711898113

https://twitter.com/Rikazz222/status/1097479001092673536

இந்த நிலையில் பிரபல ஆன் லைன் நிறுவனமான அமேசான் நிறுவனம் விஸ்வாசம் திரைப்படத்தை அமேசான் ப்ரைம் வளைத்தளத்தில் வெளியிடபோவதாக அறிவித்துள்ளது. இதனை கண்ட ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த படம் 50 வது நாளை நெருங்கும் நிலையில் இப்படி வலைதளத்தில் வெளியிட்டால் முற்றிலும் பாதிக்கும் என்று கடுப்பில் இருந்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full