திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு ஆனந்த் அம்பானி கொடுத்த விலையுயர்ந்த கிப்ட்- இவ்வளோ கோடியா, என்ன கொடுத்தாருன்னு பாருங்க

By subhashini · 14/7/2024

அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்து கொண்ட திரை பிரபலங்களுக்கு கொடுத்திருக்கும் விலையுயர்ந்த பரிசு குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கடந்த சில தினங்களாக சோசியல் மீடியா முழுவதும் ஆனந்த் அம்பானி திருமணம் குறித்த செய்தி தான் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. உலக அளவில் மிக பிரபலமான பணக்காரர்களில் ஒருவராக இருப்பவர் முகேஷ் அம்பானி. இவர் இந்தியாவில் பிரபலமான தொழிலதிபர் ஆவார்.

இவர் நீடா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு மூன்று பிள்ளைகள் இருக்கிறார்கள். அதில் ஆகாஷ், நிஷா ஆகியோருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. தற்போது முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கு தான் திருமணம் கொண்டாட்டங்கள் நடைபெற்று இருக்கிறது. தொழிலதிபர் வீரேன் மெர்சென்ட்டின் மகள், ராதிகா மெர்ச்சன்ட் என்பவரை தான் ஆனந்த் அம்பானி திருமணம் செய்து இருக்கிறார். கடந்த ஆண்டு இவர்களுடைய நிச்சயதார்த்த பிரம்மாண்டமாக நடைபெற்று இருந்தது.

முகேஷ் அம்பானி திருமணம்:

பின் திருமணத்திற்கு முந்தையாக நடைபெற இருக்கும் விழாக்கள் கோலாகலமாக நடந்தது. அந்த வகையில் கடந்த மார்ச் மாதம் குஜராத்தில் உள்ள ஜாம் நகரில் தான் திருமண விழா தொடங்கியது. இதில் இதுவரை இல்லாத அளவுக்கு நூற்றுக்கணக்கான உணவுகள், கலை நிகழ்ச்சி என நடைபெற்றது. உலகம் முழுவதிலும் உள்ள ஏராளமான பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்தார்கள். அதேபோல் இந்தியாவில் பாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை உள்ள பல பிரபலங்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து இருந்தார்கள்.

திருமணம் நிகழ்வுகள்:

மேலும், ஜாம்நகர் தொடர்ந்து வெளிநாடுகளிலும் திருமண நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை ராதிகா- ஆனந்த் திருமணம் பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இரண்டு நாட்களுக்கு முன்பே சங்கீத் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. இதில் பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டிருந்தார்கள். அதற்குப்பின் மெஹந்தி விழாவும் கோலாகலமாக நடைபெற்றது. அது மட்டும் இல்லாமல் அம்பானி வீட்டு திருமணத்திற்கு உலகம் முழுவதிலும் உள்ள பிரபலங்கள் வந்து இருந்தார்கள்.

பிரபலங்களின் பங்கேற்பு :

இவர்கள் தங்குவதற்கு 5 நட்சத்திர ஹோட்டல்களையும் ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. மேலும், ஜூலை 12ஆம் தேதியிலிருந்து 15 ஆம் தேதி வரை திருமண கொண்டாட்டங்கள் நடைபெற்ற இருக்கிறது. நடந்து முடிந்த திருமண விழாவில் ரஜினிகாந்த், ஷாருக்கான், ரன்வீர் சிங், ரன்பீர் கபூர், அட்லீ, சூர்யா, ராம் சரண், மகேஷ் பாபு, பிரித்விராஜ், ஐஸ்வர்யா ராய், விக்னேஷ் சிவன்- நயன்தாரா, இயக்குனர் அட்லி, ஏ .ஆர். ரஹ்மான் என பல பிரபலங்கள் கலந்து இருந்தார்கள். இந்த நிலையில் அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு ஆனந்த் அம்பானி கொடுத்திருக்கும் பரிசு தான் தற்போது இணையத்தில் ட்ரெண்டிங் ஆகி வருகிறது.

View this post on Instagram

A post shared by Polimer News (@polimernews)

ஆனந்த் அம்பானி கொடுத்த பரிசு:

அதாவது, அம்பானி வீட்டு திருமணத்தில் மாப்பிள்ளை தோழர்களாக கலந்து கொண்ட பிரபலங்களுக்கு 2 கோடி மதிப்பிலான 'ஓடோமா பிகே' வாட்சை ஆனந்த் அம்பானி பரிசாக வழங்கி இருக்கிறார். அந்த கடிகாரத்தில் தங்கம் மற்றும் விலை உயர்ந்த கற்கள் பொறிக்கப்பட்டு இருக்கிறது. மேலும், அந்த வாட்ச்சை கட்டிக் கொண்டு ஷாருக்கான், ரன்வீர் சிங், அர்ஜுன் கபூர் உட்பட பல பிரபலங்கள் போஸ் கொடுத்து அதை சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார்கள். அதுமட்டுமில்லாமல் திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்கள் பலரும் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பரிசுகளை வழங்கி இருக்கிறார்கள். கிட்டத்தட்ட 5000 கோடி வரை திருமண செலவு ஆனதாக கூறப்படுகிறது .மாப்பிள்ளை அனந்த அம்பானி அணிந்த திருமண உடை மட்டுமே 217 கோடி, அவர் காலில் அணிந்த செருப்பு 50 கோடி என்று கூறப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full