நடிகை அமீஷா படேல் இந்தியில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார். தமிழ் ரசிகர்களுக்கு சொல்ல வேண்டும் என்றால், தமிழில் 2003 இல் வெளியான இளையதளபதி விஜய் நடிப்பில் வெளியான புதிய கீதை என்ற படத்தில் இரண்டு கதாநாயகிகள் நடித்திருப்பனர்.அதில் ஒருவர் நம் அனைவருக்கும் பரிச்சயமான நடிகை மீரா ஜாஸ்மின் , மற்றொருவர் பிரபல பாலிவுட் நடிகை அமிஷா படேல்.

1975 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 9 ஆம் தேதி மும்பையில் பிறந்த இவர் தனது 5 வயதிலேயே பரத நாட்டிய கலையை கற்றுவந்தார்.தனது பள்ளி படிப்பை முடித்தவுடன் தனது தந்தையின் பள்ளி பருவ நண்பர் ஒருவர் மூலமாக கிடைத்த வாய்ப்பின் மூலம் 2000 வெளியான கஹோனா பியார் ஹாய் என்ற படத்தில் பாலிவுட் நடிகர் ரித்திக் ரோஷனுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு இவருக்கு கிடைத்தது.

Advertisement

ஆனால் தனது கல்லூரி படிப்பிற்காக அமெரிக்க செல்ல விரும்பியதால் அந்த படத்தில் நடிக்க மறுத்தவிட்டார். அதன் பின்னர் அந்த வாய்ப்பு பாலிவுட் நடிகை கரீனா விற்கு வர அவரும் அந்த படத்தில் இருந்து பாதியிலேயே விலகி விட்டார். இதனால் அந்த வாய்ப்பு அமிஷா படேலுக்கு மீண்டும் கிடைத்தது. அதன் பின்னர் இந்தியில் பல்வேறு படங்களில் நடித்து வந்தார். அதே போல இவர் புதிய கீதை படத்திற்கு முன்பாகவே பிரசாந்த் படத்தில் நடித்துள்ளார்.

ஆம், புதிய கீதை படத்திற்கு முன்பே இவர் ‘என்ன விலை அழகே’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாக இருந்தார். பிரசாந்த் ஹீரோவாக நடித்த இந்த படத்தை ராஜ் கபூர் இயக்கி இருந்தார், ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்து இருந்தார். மேலும், ரகுவரன் மணிவண்ணன், சரிதா, விஜயகுமார், செந்தில், பொன்னம்பலம், வெண்ணிற ஆடை மூர்த்தி என்று பலர் இந்த படத்தில் நடித்திருந்தார்கள். ஆனால், நடிகை அமிஷாவிற்கு ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனை காரணமாகவும் ரகுவரனின் திடீர் இறப்பாலும் இந்த படம் கைவிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
Advertisement