நிபந்தனையற்ற அன்பு, அமைதி - தன் மகளுக்கு பெயர் சூட்டி மகிழ்ந்த நடிகர் விஷ்ணு விஷால் - என்ன பெயர் தெரியுமா?

By subhashini · 7/7/2025

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்ந்து கொண்டிருப்பவர் விஷ்ணு விஷால். இவர் ரஜினி நடராஜ் என்பவரை காதலித்து 2011 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆர்யன் என்ற மகனும் உள்ளார். சில ஆண்டுகளாகவே இவர்கள் இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதன் காரணமாக 2017 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். பின் விஷ்ணு அவர்கள் பேட்மிண்டன் வீராங்கனை ஜுவாலாவை திருமணம் செய்து கொண்டார்.

இருந்தாலும், விஷ்ணு விஷால் தன்னுடைய மகன் ஆரியனை கவனித்து கொள்கிறார். அதேபோல் ஜுவாலாவும் ஆரியனை ஏற்றுக்கொண்டார். விஷ்ணு விஷால்- ஜுவாலாவுக்கு திருமணம் ஆகி நான்கு ஆண்டுகள் நிறைவடைந்து இருக்கிறது. மேலும், திருமண நாளிலேயே விஷ்ணு விஷால்- ஜுவாலாவிற்கு அழகான பெண் குழந்தை பிறந்திருக்கிறது. இந்த சந்தோஷமான செய்தியை விஷ்ணு விஷால் சோசியல் மீடியாவில் பகிர்ந்திருந்தார். இதை பார்த்து ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

விஷ்ணு விஷால் மகள்:

இப்படி இருக்கும் நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் தன்னுடைய மகளுக்கு பெயர் சூட்டும் விழாவை ஹைதராபாத்தில் நடித்திருக்கிறார். இதில் பாலிவுட் நடிகர் ஆமீர்கான் கலந்து கொண்டிருக்கிறார். பின் விஷ்ணு விஷாலின் மகளுக்கு மீரா என்று பெயர் சூட்டி மகிழ்ந்திருக்கிறார் ஆமீர்கான். தற்போது பெயர் சூட்டு விழா தொடர்பான புகைப்படங்களை எல்லாம் சோசியல் மீடியாவில் பகிர்ந்த விஷ்ணு விஷால், எங்களுடைய மீராவை அறிமுகப்படுத்துகிறோம்.

https://www.youtube.com/shorts/YewjO0eR88k

விஷ்ணு விஷால் பதிவு:

எங்கள் குழந்தைக்கு பெயரிட ஹைதராபாத்திற்கு வந்த ஆமீர்கான் சாருக்கு ரொம்ப பெரிய ஹக். மீரா என்பது நிபந்தனையற்ற அன்பையும் அமைதியும் குறிக்கிறது. ஆமீர் சாருடன் இருக்கும் பயணம் மேஜிக் ஆகவே இருக்கிறது. எங்கள் குழந்தைக்கு அழகான பெயரை சூட்டியதற்கு நன்றி சார் என்று கூறியிருக்கிறார்.
கடந்த 2023 ஆம் ஆண்டு சென்னை வெள்ளத்தின் போது தான் ஆமீர்கான் மற்றும் விஷ்ணு விஷால் இருவருக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டது. அதனிலிருந்து இவர்கள் இருவரும் நல்ல நட்பு ரீதியாக இருக்கிறார்கள்.

விஷ்ணு விஷால் திரைப்பயணம்:

இவர் 2009 ஆம் ஆண்டு வெளிவந்த வெண்ணிலா கபடி குழு என்ற படத்தின் மூலம் தான் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். முதல் படத்திலேயே அவர் மக்கள் மத்தியில் பிரபலமாக அறியப்பட்டார். அதனை தொடர்ந்து இவர் பலேபாண்டியா, குள்ளநரிக்கூட்டம், நீர்பறவை, முண்டாசுப்பட்டி, ஜீவா போன்ற பல படங்களில் நடித்து தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். மேலும், சமீப காலமாக விஷ்ணு விஷால் அவர்கள் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

விஷ்ணு விஷால் படங்கள்:

அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான கட்டா குஸ்தி மற்றும் FIR ஆகிய படங்கள் கூட ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருந்தது. அதன் பின் இவர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய லால் சலாம் என்ற படத்தில் நடித்து இருந்தார். இந்த படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. இது மட்டுமில்லாமல் இன்னும் சில படங்களில் விஷ்ணு கமிட் ஆகியிருக்கிறார். அதில் தற்போது இவருடைய நடிப்பில் உருவாகி இருக்கும் படம் மோகன்தாஸ். அது மட்டும் இல்லாமல் தன்னுடைய மகன் ஆரியன் பெயரிலும் ஒரு படத்தில் விஷ்ணு விஷால் நடித்து வருகிறார். இதனை தொடர்ந்து இடம் பொருள் ஏவல் என்ற படத்திலும் விஷ்ணு நடித்திருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full