அந்த காலத்தில் பெரும்பாலான சாமி படங்களுக்கு வில்லனாக நடித்தவர் தான் இந்த ராமி ரெட்டி. அம்மன் படத்தில் சண்டா என்ற கேரக்டரில் நடித்து பிரபலம் ஆனவர் இந்த ராமி ரெட்டி.
இவர் 1959ஆம் ஆண்டு ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் பிறந்தவர். இவர் ஹைதராபாத்த்தில் உள்ள ஒஸ்மானிய யூனிவர்சிட்டியில் ஜர்னலிசம் படித்தவர். அதன் பின்னர் ஹைதராபாத்தில் உள்ள தனியார் கல்லூரியில் ப்ரொபசராக பணியாற்றி வந்தார்.

இருந்தும் இவர் கண் எல்லாம் சினிமாவின் மீது தான் இருந்தது. எப்படியாவது சினிமாவில் நடித்துவிட வேண்டும் என சினிமா கம்பெனிகளில் ஏறி இறங்கிய இவருக்கு கிடைத்த வாய்ப்பு தான் தெலுங்கு படமான அனுக்சம்.
இந்த படம் 1990ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த படத்தில் வந்த ‘ஸ்பாட் பெடதா’ என்ற ஒரே டயலாக் மூலம் பேமஸ் ஆனார் ராமி ரெட்டி. சத்யராஜ் எப்படி ‘தகிடு தகிடு’ என்ற ஒரே டயலாக் மூலம் பேமஸ் ஆனாரோ அதே போல் ராமி ரெட்டியும் தெலுங்கில் பேமஸ் ஆனார். அதன் பின்னர் தமிழ் அவருக்கு காந்த வாய்ப்பு தான் அம்மன். இந்த படத்தில் ‘ஜன்டா’ என்ற கேரக்டரில் நடித்தன் மூலம் அதன் பின்னர் வந்த அனைத்து சாமி படங்களுக்கும் வில்லன் ரோல் இவருக்கு கிடைத்தது.

Advertisement

தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மராத்தி, போஜ்புரி, கன்னடா என அனைத்து மொழி படங்களிலும் நடித்தார் ராமி ரெட்டி. அதன் பின்னர் படம் தயாரிக்க எண்ணி அவர் தயாரித்த படங்கள் எல்லாம் அவரது காலை வாரி விட்டன. ஒரு தெலுங்கு படத்தில் சாயிபாபாவாக கூட நடித்து அசத்தி இருப்பார்.
பின்னர் பணக் கஷ்டம் ஏற்பட அதில் இருந்த அவரால் மீளவே முடியவில்லை. இதனால் உடல் நலம் கெட்டு லிவர் மற்றும் கிட்னி பெலியர் ஆகி பரிதாபமாக இறந்து போனார் ராமி ரெட்டி.

Advertisement