அம்மனில் பக்திமானாக நடித்து வரும் நடிகை - தொப்பியை வைத்து உடலை மறைத்து நடத்திய சர்ச்சை போட்டோ ஷூட்.

By Rajkumar · 17/7/2021

கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பாகும் பக்தி தொடர் அம்மன். இந்த தொடரை ஐ.அஹ்மத் என்பவர் தயாரிக்க, ரவி பிரியன் என்பவர் இயக்கி வருகிறார். சக்தி என்ற கதாபாத்திரத்தில் நடிகை பவித்ரா கெளடா நடிக்க, அவருக்கு ஜோடியாக ஈஸ்வர் என்ற கதாபாத்திரத்தில் நடிகர் அமல்ஜித் என்பவர் நடிக்கிறார். அம்மன் தொடரின் கதை இயற்கைக்கு அப்பாற்பட்ட சக்திகளைக் கொண்ட ஒரு சிறிய நகரப் பெண்ணான சக்தியைச் சுற்றி நகர்கிறது.

இந்த தொடரில் பாக்கியலட்சுமி சீரியல் புகழ் ஜெனிபர், பிக் பாஸ் புகழ் சம்யுக்தா ஆகியோர் நடித்து வாங்கின்றனர். இந்த தொடர் கடந்த ஆண்டே ஒளிபரப்பப்பட்ட நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக நிறுத்தப்பட்டு இருந்தது. இப்படி ஒரு நிலையில் மீண்டும் இந்த தொடர் ஒளிபரப்பபாக இருக்கிறது. இந்த தொடரில் சக்தி என்ற கதாபத்திரத்தில் நடித்து வருகிறார் பவித்ரா கெளடா.

இதையும் பாருங்க : விஷ்ணு விஷால் Birthday ஸ்பெஷல் - தான் மிகவும் நேசித்த கிரிக்கெட்டை அவர் விட்ட காரணம் இது தானாம் பாவம்.

கலர்ஸ் சூப்பர் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மாங்கல்யம் தந்துனானே என்ற சீரியலில் மாயா என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இது தான் இவரது முதல் சீரியல். இந்த சீரியலுக்கு பின்னர் தான் இவருக்கு அம்மன் தொடரில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த சீரியல் தான் இவருக்கு மிகப்பெரிய பிரபலத்தை ஏற்படுத்தி கொடுத்துள்ளது.

இந்த தொடரில் மிகவும் மங்களகரமாக மிகவும் பக்திமயமான ஒரு கதாபாத்திரத்தில் நடித்து வரும் இவர் நிஜ வாழ்க்கையில் அப்படியே ஆப்போசிட்டாக படு கவர்ச்சியான பேர் வழியாக இருக்கிறார். மாடல் அழகி என்பதால் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி வரும் இவர் சமீபத்தில் வெறும் தொப்பியை வைத்து மறைத்தபடி போட்டோ ஷூட் ஒன்றை நடத்தியுள்ளார்.

behindtalkies AMP · Quick view
View full