'அதற்கு நான் வெட்கப்படவில்லை' ஓரின சேர்க்கை குறித்து அம்மு அபிராமி சொன்ன கருத்து.

By subhashini · 2/4/2024

தன்பாலின ஈர்ப்பு குறித்து நடிகை அம்மு அபிராமி கொடுத்து இருக்கும் பதிலடி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகையாக அம்மு அபிராமி இருக்கிறார். விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ‘ராட்சசன்’ படத்தின் மூலம் தான் இவர் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். அதற்கு முன் அம்மு அபிராமி 2017 ஆம் ஆண்டு வெளியான ‘என் ஆளோட செருப்ப காணோம்’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார்.

அதன் பின்னர் கார்த்தி நடிப்பில் வெளியான ‘தீரன் அதிகாரம் ஒன்று’ என்ற திரைப்படத்தில் கார்த்தியின் தங்கையாக நடித்து இருந்தார். ஆனால், இவர் மக்கள் மத்தியில் பிரபலமானது ராட்சசன் படத்தில் தான். அதை தொடர்ந்து வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் அவர்கள் நடிப்பில் வந்த அசுரன் படத்தில் நடிகை அம்மு அபிராமி நடித்திருந்தார். இந்த படத்தில் தனுஷின் பிளாஷ் பேக் காட்சியில் மாரியம்மாள் என்ற கதாபாத்திரத்தில் தனுஷுக்கு நிகராக நடித்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார்.

அம்மு அபிராமி குறித்த தகவல்:

இதனை தொடர்ந்து பல படங்களில் இவர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதனை அடுத்து விஜய் டிவியில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியில் அம்மு அபிராமி போட்டியாளராக கலந்து கொண்டு சிறப்பாக விளையாடியிருந்தார். அது மட்டும் இல்லாமல் இவர் இரண்டாவது இடத்தை பிடித்திருந்தார். மேலும், இவர் நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் கடந்த வருடம் வெளியான பாபா பிளாக் ஷீப் என்ற படத்தில் அம்மு அபிராமி கதாநாயகியாக அறிமுகமானார்.

அம்மு அபிராமி நடித்த படங்கள்:

அதற்கு பின் அம்மு நடிப்பில் வெளியாகி இருக்கும் கண்ணகி. அறிமுக இயக்குனர் யஷ்வந்த் கிஷோர் இயக்கி இருக்கிறார். இந்தப் படத்தில் கீர்த்தி பாண்டியன், வித்யா பிரதீப், ஷாலின் ஜோயா, அபிராமி, வெற்றி, ஆதேஷ் சுதாகர், மௌனிகா, யஷ்வந்த் கிஷோர் ஆகியோர் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். பெண்களை மையமாக வைத்து இந்த படத்தை இயக்குனர் இயக்கி இருக்கிறார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று இருக்கிறது. தற்போது அம்மு அபிராமி நடிப்பில் வெளியாகியிருக்கும் படம் ஹாட்ஸ்பாட்.

அம்மு அபிராமி பேட்டி:

இந்த படத்தில் கலையரசன், சோபியா, சாண்டி மாஸ்டர், கௌரி கிஷன், ஆதித்ய பாஸ்கர், ஜனனி ஐயர், சுபாஷ் உட்பட பல நடிகர்கள் நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை விக்னேஷ் கார்த்தி இயக்கியிருக்கிறார். இந்த படத்தை கேஜேபி டாக்கீஸ் மற்றும் 7 வாரியார் பிலிம்ஸ் நிறுவனங்கள் சேர்ந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த படத்திற்கு சதீஷ் ரகுநாதன்- வான் என்று இரண்டு பேரும் இசையமைத்திருக்கிறார்கள். இந்த படம் கடந்த மார்ச் 29ஆம் தேதி தான் வெளியாகியிருந்தது. இந்நிலையில் இந்த படத்தில் நடித்த நடிகர்கள் பேட்டி அளித்து இருக்கிறார்கள்.

தன்பாலின ஈர்ப்பு குறித்து சொன்னது:

அப்போது அம்மு அபிராமியிடம் படத்தில் அவர் தான் ஒரு பால் தன்பாலின ஈர்ப்பாளர் என்று ஒரு வசனம் பேசி இருப்பார். இது குறித்து கேள்விகள் கேட்கிறார்கள். அதற்கு அம்மு அபிராமி, இப்போது உலகத்தில் எல்லோருமே முற்போக்கை நோக்கி தான் சென்று கொண்டு இருக்கிறார்கள். காதல் என்றால் அது காதல் தான். அதற்கு வேறு எந்த அர்த்தமும் கிடையாது. அது உண்மையாக இருந்தால் போதும். காதல் குறிப்பிட்ட பாலினத்தவரை பார்த்து தான் வர வேண்டும் என்றெல்லாம் கிடையாது. அந்த வசனத்தை பேசியதற்காக நான் வெட்கப்பட்டதும் கிடையாது. அது ஒன்றும் தவறு கிடையாது என்று பேசி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full