திருமணத்திற்கு முன்பாகவே குழந்தை, முதல் காதலரை பிரிந்து ஓராண்டு கூட ஆகாத நிலையில் பிரபல நடிகருடன் டேட்டிங் சென்ற எமி.

By Rajkumar · 16/2/2022

எமி ஜாக்சன் தன்னுடைய காதலனை பிரிந்து சில மாதங்கள் கூட ஆகாத நிலையில் தற்போது பிரபல நடிகர் ஒருவர் உடன் டேட்டிங் செய்துள்ள புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஹாலிவுட் சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு புயலாய் வந்தவர் எமி ஜாக்சன். இவர் ஹாலிவுட் மாடலும் ஆவார். அதன் மூலம் கிடைத்த பிரபலத்தினால் எமி ஜாக்சன் நடிகை ஆனார். தமிழில் கடந்த 2010 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியான ‘மதராசப்பட்டிணம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் அதன் பின்னர் ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, தேவி உள்ளிட்ட பல படங்களில் எமி ஜாக்சன் நடித்தார்.

மேலும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இவரது நடிப்பில் கடைசியாக 2.0 என்ற பிரம்மாண்ட படம் வெளியாகி பெரும் வெற்றியடைந்தது. எமி ஜாக்சன் அவர்கள் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். இப்படி இவர் படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருக்கும் போது ஜார்ஜ் என்ற தொழிலதிபரை காதலித்து இருந்தார். விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள் என்றும் செய்திகள் பரவியது.

எமியின் குடும்ப வாழ்க்கை:

ஆனால், அம்மணி அதற்க்கு முன்பாக கர்ப்பமாகிவிட்டார். கர்ப்பமான பின்னர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். திருமணத்திற்கு முன்பே எமி தாயான விஷயம் சினிமா வட்டாரங்களில் பேசு பொருளானது. பிறகு எமி ஜாக்சனுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு இந்தத் தம்பதி ஆண்ட்ரியாஸ் எனப் பெயரிட்டுள்ளனர். பொதுவாக குழந்தையை பெற்றெடுத்தாள் நடிகைகள் தங்களது உடல் அமைப்பை கண்டுகொள்வது இல்லை.

எமி நடித்த படங்கள்:

ஆனால், எமி ஜாக்சன் குழந்தை பிறந்த பின்னரும் தனது உடலை பிட்டாக வைத்துக்கொண்டு இருக்கிறார். தற்போது கோலிவுட், டோலிவுட்டை தாண்டி, அம்மணி ஹாலிவுட்டிலும் 'காசிப் கேர்ள்' என்கிற வெப் சீரிஸில் நடித்து பிரபலமானார். மேலும், குழந்தை பிறந்த பிறகும் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தார்கள். திடீரென்று எமி கடந்த ஆண்டு தன்னுடைய காதலனுடன் மனகசப்பு ஏற்பட்டு விட்டது அதனால் பிரிகிறேன் என்று அறிவித்திருந்தார்.

எமி டேட்டிங் செய்யும் நடிகர்:

இதனால் சோசியல் மீடியாவில் பல விமர்சனங்கள் எழுதி இருந்தது. இந்நிலையில் நடிகை எமிஜாக்சன் தன்னுடைய காதலனை பிரிந்து ஓராண்டு கூட ஆகாத நிலையில் தற்போது பிரபல நடிகருடன் டேட்டிங் சென்ற புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகியுள்ளது. அவர் வேற யாரும் இல்லைங்க, தற்போது நடிகை எமி ஜாக்சன் நடித்த காசிப் கேர்ள் என்ற படத்தில் நடித்த நடிகர் எட் வெஸ்ட்விக் தான். நடிகர் எட் வெஸ்ட்விக் என்பவருடன் எமி டேட்டிங் செய்திருக்கிறார். ஏற்கனவே நடிகர் எட் வெஸ்ட்விக் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டமார் என்ற பெண்ணை இரண்டு ஆண்டுகளாக காதலித்தார்.

எட் வெஸ்ட்விக் மீது எழுந்து உள்ள புகார்:

பின் அவர் அந்த பெண்ணை பிரேக் அப் செய்தார். அது மட்டுமின்றி இவர் பாலியல் புகாரிலும் சிக்கினார். பாலியல் பலாத்காரம் செய்ததாக 3 பெண்கள் எட் வெஸ்ட்விக் மீது கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி பல சர்ச்சைகளில் சிக்கியிருக்கும் நடிகர் எட் வெஸ்ட்விக் உடன் எமி டேட்டிங் செய்திருக்க தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பயங்கர பேசுபொருளாக வருகிறது. அது மட்டுமில்லாமல் எமி ஜாக்சன் குறித்து பலரும் விமர்சித்து கருத்து பதிவிட்டு வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full