மீண்டும் தாயான நடிகை எமி ஜாக்சன் - என்ன குழந்தை தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்
நடிகை எமி ஜாக்சனுக்கு மீண்டும் குழந்தை பிறந்திருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஹாலிவுட் சினிமாவில் இருந்து தமிழ் சினிமாவிற்கு புயலாய் வந்தவர் எமி ஜாக்சன். இவர் பிரபல மாடலும் ஆவார். அதன் மூலம் கிடைத்த பிரபலத்தினால் எமி ஜாக்சன் நடிகை ஆனார். தமிழில் இவர் கடந்த 2010 ஆம் ஆண்டு ஆர்யா நடிப்பில் வெளியான ‘மதராசப்பட்டிணம்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி இருந்தார்.
அதன் பின்னர் ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, தேவி உள்ளிட்ட பல படங்களில் எமி ஜாக்சன் நடித்து இருந்தார். மேலும், இவர் சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் இணைந்து 2.0 என்ற பிரம்மாண்ட படம் வெளியாகி பெரும் வெற்றியடைந்தது. அதை தொடர்ந்து எமி தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, இந்தி, கன்னடம் போன்ற பல மொழி படங்களிலும் நடித்து இருக்கிறார். இப்படி இவர் படங்களில் பிசியாக நடித்து கொண்டு இருக்கும் போது ஜார்ஜ் என்ற தொழிலதிபரை காதலித்து இருந்தார்.
எமி ஜாக்சன் குறித்த தகவல்:
விரைவில் இருவரும் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார்கள் என்றும் செய்திகள் வந்தது. ஆனால், அம்மணி அதற்க்கு முன்பாக கர்ப்பமாகிவிட்டார். கர்ப்பமான பின்னர் அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு இருந்தார். திருமணத்திற்கு முன் எமி தாயான விஷயம் சினிமா வட்டாரங்களில் பேசு பொருளாகி இருந்தது. பிறகு எமி ஜாக்சனுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகும் இருவரும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வாழ்ந்து வந்தார்கள்.
எமி காதல் விவகாரம்:
திடீரென்று எமி, சில ஆண்டுக்கு முன் தன்னுடைய காதலனுடன் மனகசப்பு ஏற்பட்டு விட்டது. அதனால் பிரிகிறேன் என்று அறிவித்திருந்தார். இவர் ஏற்கனவே இரண்டு நபரை காதலித்து பிரேக் அப் செய்து தான் ஜார்ஜை காதலித்தார். அதை அடுத்து இவர் இங்கிலாந்தை சேர்ந்த பிரபல ஹாலிவுட் நடிகர் எட் வெஸ்ட்விக்கை எமி காதலிப்பதாக சோசியல் மீடியாவில் தகவல் வெளியானது. ஏற்கனவே நடிகர் எட் வெஸ்ட்விக் தென் ஆப்பிரிக்காவை சேர்ந்த டமார் என்ற பெண்ணை இரண்டு ஆண்டுகளாக காதலித்தார்.
எமி மீண்டும் திருமணம்:
பின் அவர் அந்த பெண்ணை பிரேக் அப் செய்தார். அது மட்டுமின்றி இவர் பாலியல் புகாரிலும் சிக்கினார். இப்படி பல சர்ச்சைகளில் உள்ள நடிகர் எட் வெஸ்ட்விக் உடன் எமி டேட்டிங் செய்வது குறித்து பலரும் விமர்சித்து கருத்து போட்டு இருந்தார்கள். இருந்தாலும் இருவருக்கும் கடந்த ஆண்டு லண்டனில் பிரம்மாண்டமாக நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இதில் எமி ஜாக்சன் தன்னுடைய மகனையும் அழைத்து வந்திருந்தார். அதன் பின் இவர்கள் திருமணம் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோலாகலமாக நடந்தது.
எமி குழந்தை:
சமீபத்தில் தான் இவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருப்பதாக சோசியல் மீடியாவில் கூறி இருந்தார். இப்படி இருக்கும் நிலையில் எமி ஜாக்சன்- எட் வெஸ்ட்விக் தம்பதிக்கு தற்போது அழகான ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. அந்த குழந்தைக்கு 'ஆஸ்கர் அலெக்சாண்டர் வெஸ்ட்விக்' பெயர் வைத்திருக்கிறார்கள். தற்போது இந்த தகவலை எமி ஜாக்சன் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார்கள். இதை பார்த்து பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.