வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் இளம் திரையுலக தம்பதி ஆனந்த் ராம் - பிரிகிடா!

வாழ்க்கையின் புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் இளம் திரையுலக தம்பதி ஆனந்த் ராம் - பிரிகிடா!

By S.Dhilip Kumar · 1/7/2026

"சில பயணங்கள் ஒரு கனவோடுதான் தொடங்குகின்றன; ஆனால், ஒரு சிலருக்கு மட்டுமே அந்தப் பயணத்தின் வழியிலேயே மற்றொரு அழகான கனவும் துணையாகக் கிடைக்கிறது." தமிழ் திரையுலகின் இளம் மற்றும் திறமையான நடிகர்களான ஆனந்த் ராம் மற்றும் பிரிகிடா (Brigida) ஜோடி, தங்கள் வாழ்வின் மிக மகிழ்ச்சியான புதிய அத்தியாயத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். நடிகர் ஆனந்த் ராமின் பிறந்தநாளான இன்று, தங்களது காதலை நெகிழ்ச்சியான சமூக ஊடகப் பதிவின் மூலம் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளனர்.

சினிமா மீதான அளவற்ற காதலாலும், அர்ப்பணிப்பான உழைப்பாலும் தங்களுக்கென தனித்தனி பாதைகளை உருவாக்கி, ரசிகர்களின் நன்மதிப்பைப் பெற்றவர்கள் ஆனந்த் ராம் மற்றும் பிரிகிடா. திரையில் தனித்தனியாகப் பயணித்த இவர்களின் இருவேறு கனவுகள், கலை மீதான பொதுவான ஈர்ப்பால் ஒன்றிணைந்து, தற்போது நிஜ வாழ்க்கையிலும் ஒரு அழகான இணையாக உருவெடுத்துள்ளது.

திரையுலகில் "மீசைய முறுக்கு தம்பி" என்றும், "பவி டீச்சர்" (Pavi Teacher) என்றும் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் இந்த ஜோடி, தற்போது தமிழ் சினிமாவின் கியூட் நிஜ வாழ்க்கை தம்பதிகளின் (Real-life couples) பட்டியலில் இணைந்து ரசிகர்களுக்கும் திரையுலகினருக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். தங்கள் வாழ்வின் இந்த அடுத்த கட்டத்தை நோக்கி நகரும் ஆனந்த் ராம் - பிரிகிடா ஜோடியின் திருமணம் இந்த ஆண்டே நடைபெறவுள்ளது. இதுகுறித்த கூடுதல் விவரங்கள் மற்றும் திருமண தேதி ஆகியவை வரும் வாரங்களில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.

தங்களின் தனிப்பட்ட வாழ்க்கையின் இந்த மகிழ்ச்சியான தருணத்திலும், இருவரும் கலை மீதான தங்களின் அர்ப்பணிப்பைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்லவுள்ளனர். தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் இவர்களது நடிப்பில் அடுத்தடுத்து சுவாரசியமான திரைப்படங்கள் வெளியாக வரிசைகட்டி நிற்கின்றன.

தம்பதியின் நெகிழ்ச்சியான அறிக்கை:

"இத்தனை ஆண்டு காலமாக எங்கள் மீது அளவற்ற அன்பையும் ஆதரவையும் பொழிந்து வரும் எங்கள் குடும்பத்தினர், நண்பர்கள், சக திரையுலகினர், பத்திரிகை மற்றும் ஊடகத் துறையினர் மற்றும் அன்பு ரசிகர்களுக்கு எங்களது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். எங்களின் ஒவ்வொரு காலகட்டத்திலும் தூணாக நின்ற நீங்கள், எங்களது இந்த புதிய தொடக்கத்திற்கும் உங்கள் ஆசிகளையும் வாழ்த்துகளையும் வழங்க வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்."

தோழமை, பகிரப்பட்ட கனவுகள் மற்றும் வாழ்நாள் முழுமைக்குமான அழகான நினைவுகளோடு தங்களது புதிய பயணத்தைத் தொடங்கும் இந்த இளம் ஜோடிக்கு திரையுலகினரும் ரசிகர்களும் தங்களது வாழ்த்துகளைக் தெரிவித்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full