ஒருக் காலத்தில் இன்றைய தொகுப்பாளர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் ஆனந்த கண்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலமாகி இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் உண்மையில் இவர் ஒரு சிங்கப்பூர் தமிழர் ஆவார். சிங்கப்பூரில் உள்ள வசந்தம் தொலைக்காட்சி என்ற டீவி சேனனில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராக இருந்தார். பின்னர் ரேடியோ சிட்டி எப்.எம் ரேடியோ ஜாக்கியாக வாய்ப்பு கிடைத்து குடும்பத்துடன் சென்னையில் வந்து செட்டில் ஆனார் ஆனந்த கண்ணன். ரேடியோ சிட்டியில் வேலை செய்து கொண்டிருக்கும் போதே, சன் மியூசிக் சேனலில் வீ.ஜேவாக தேர்வானார்.

அதன் பின்னர் சன் டிவியில் சிந்துபாத் என்ற குழந்தைகளை கவரும் நாடகத்தில் நடித்தார் ஆனந்த கண்ணன். இவர் நடித்த விக்ரமாதித்தன் தொடர் 90களில் பிறந்த குழந்தைகளின் பேவரட் நாடகம் ஆகும். மேலும், இவர் சினிமாவில் சில படங்களில் நடித்து உள்ளார். ஆனால், இவரை கடந்த 7 ஆண்டுகளாக எந்த தொலைக்காட்சியிலும் கான முடியவில்லை.

இதையும் பாருங்க : லிங்கு சாமி ஷூட்டிங்கில் இருந்து வந்த அதிர்ச்சி தகவல் – நதியா உட்பட இத்தனை பேருக்கு கொரோனாவாம்.

Advertisement

இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் டிஸ்கவரி தமிழ் தொலைக்காட்சியில் துவங்கிய சுவை என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களமிறங்கி இருந்தார். இவரது ரீ – என்ட்ரியை பார்த்து பலரும் மகிழ்ச்சியடைந்தனர். இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இவர் திடீர் மரணமடைந்தார். இவருக்கு குடல் புற்று நோய் இருந்துள்ளது.

அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டும் வந்து உள்ளார். ஆனால், புற்று இவரது உடல் முழுதும் பரவிவிட்ட நிலையில் இவரது உடல் நிலை மோசமானதால் காலமானார். ஆனந்த கண்ணனின் இறப்பை அடுத்து சமீபத்தில் துக்க அனுசரிப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் சன் மியூசிக் தொகுப்பாளர்களான பிரஜின், ஹேமா சின்ஹா, லிங்கேஷ், முரளி, உஷா என்று பலர் கலந்துகொண்டு கண்ணீர் மல்க பேசி இருக்கின்றனர்.

Advertisement
Advertisement