'நான் இருந்துட்டா இப்படி செய்' - மனைவியிடன் தன் கடைசி ஆசையை கூறியுள்ள ஆனந்த கண்ணன்.

By Rajkumar · 21/8/2021

மறைந்த தொகுப்பாளர் ஆனந்த கண்ணனின் கடைசி ஆசை குறித்து பிரபல சன் மியூசிக் விஜே நிஷா கூறி இருக்கிறார். ஒரு காலத்தில் இன்றைய தொகுப்பாளர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் ஆனந்த கண்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலமாகி இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் உண்மையில் ஒரு சிங்கப்பூர் தமிழர் ஆவார். சிங்கப்பூரில் உள்ள வசந்தம் தொலைக்காட்சி என்ற டீவி சேனனில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராக இருந்தார். பின்னர் ரேடியோ சிட்டி எப்.எம் ரேடியோ ஜாக்கியாக வாய்ப்பு கிடைத்து குடும்பத்துடன் சென்னையில் வந்து செட்டில் ஆனார் ஆனந்த கண்ணன்.

ரேடியோ சிட்டியில் வேலை செய்து கொண்டிருக்கும் போதே, சன் மியூசிக் சேனலில் வீ.ஜேவாக தேர்வானார்.அதன் பின்னர் சன் டிவியில் சிந்துபாத் என்ற குழந்தைகளை கவரும் நாடகத்தில் நடித்தார் ஆனந்த கண்ணன். இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இவர் திடீர் மரணமடைந்தார். இவருக்கு குடல் புற்று நோய் இருந்துள்ளது.அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டும் வந்து உள்ளார். ஆனால், புற்று, இவரது உடல் முழுதும் பரவிவிட்ட நிலையில் இவரது உடல் நிலை மோசமானதால் காலமானார்.

இப்படி ஒரு நிலையில் ஆனந்த கண்ணன் இறப்பதற்கு முன்பாக தனது மனைவியிடம் சொன்ன கடைசி ஆசை குறித்து கூறியுள்ளார் நிஷா, அவன் இறப்பதற்கு முன்பாக அவருடைய மனைவியிடம், என்னுடைய சாவு கல்யாண சாய மாதிரி இருக்க வேண்டும். வீட்டிற்கு வரும் அனைவரும் சிரித்த முகத்தோடு வரவேற்க வேண்டும். மேளதாளத்தோடு என்னை தூக்கிச் செல்ல வேண்டும் என்று கூறி இருக்கிறார். அவருடைய கடைசி ஆசையை அவரது மனைவி செய்துவிட்டார்கள்.

மனைவியுடன் ஆனந்த கண்ணன்

அவருடைய மனைவிக்கு என்ன ஆறுதல் சொல்லப் போகிறோம் என்பதே தெரியவில்லை என்று கூறியிருக்கிறார் நிஷா. கண்ணனுக்கு நாட்டுப்புற கலைகள் மீது காதல் அதிகம். அவருக்காக நாங்க எல்லோரும் சேர்ந்து இந்த கலைகள் தொடர்பாக ஏதாவது ஒரு விஷயம் பண்ணனும்னு முடிவு பண்ணியிருக்கோம் என்று மிகவும் உருக்கமுடன் கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full