புற்றுநோயால் மறைந்த ஆனந்த கண்ணன் - அவரின் பிறந்தநாளில் அவரின் மனைவி போட்ட எமோஷ்னல் பதிவு - வருந்தும் ரசிகர்கள் ஆனந்த கண்ணன்
மறைந்த தன் கணவரின் பிறந்தநாளில் மிகவும் உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் ஆனந்த கண்ணனின் மனைவி. ஒரு காலத்தில் இன்றைய தொகுப்பாளர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்தவர் ஆனந்த கண்ணன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் காலமாகி இருந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவர் உண்மையில் இவர் ஒரு சிங்கப்பூர் தமிழர் ஆவார். சிங்கப்பூரில் உள்ள வசந்தம் தொலைக்காட்சி என்ற டீவி சேனனில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் தொகுப்பாளராக இருந்தார். பின்னர் ரேடியோ சிட்டி எப்.எம் ரேடியோ ஜாக்கியாக வாய்ப்பு கிடைத்து குடும்பத்துடன் சென்னையில் வந்து செட்டில் ஆனார்.
ஆனந்த கண்ணன். ரேடியோ சிட்டியில் வேலை செய்து கொண்டிருக்கும் போதே, சன் மியூசிக் சேனலில் வீ.ஜேவாக தேர்வானார்.அதன் பின்னர் சன் டிவியில் சிந்துபாத் என்ற குழந்தைகளை கவரும் நாடகத்தில் நடித்தார் ஆனந்த கண்ணன். இவர் நடித்த விக்ரமாதித்தன் தொடர் 90களில் பிறந்த குழந்தைகளின் பேவரட் நாடகம் ஆகும். மேலும், இவர் சினிமாவில் சில படங்களில் நடித்து உள்ளார். ஆனால், இவரை கடந்த 7 ஆண்டுகளாக எந்த தொலைக்காட்சியிலும் கான முடியவில்லை.
இறுதியாக பங்கேற்ற நிகழ்ச்சி :
இப்படி ஒரு நிலையில் இவர் இறுதியாக டிஸ்கவரி தமிழ் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிப்பரப்பாக இருக்கும் சுவை என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களமிறங்கி இருந்தார். இவர் கிராமிய கலைகள் மீதான ஆர்வத்தின் காரணமாக சிங்கப்பூரில் குடியேறினார். இவர் தொகுப்பாளராக வேலை செய்து கொண்டிருந்த போது நா. முத்துசாமி என்பவரிடம் கூத்துப்பட்டறையில் பயிற்சிஎடுத்தார். அப்போதிலிருந்து இவருக்கு கிராமிய கலைகளின் மீது அதிக ஆர்வம் ஏற்பட்டது.
7 ஆண்டு பிரேக் :
அதன் பின்னர் கரகாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட கிராமிய கலைகளில் அனுபவம் பெற்ற பயிற்சியாளர்கள் இடம் பல ஆண்டுகளாகவே தான் கற்ற பாரம்பரிய தமிழ் கலைகளை மேடை நாடகங்கள், தெருக்கூத்துக்கள், கதைகள் வாயிலாக பிற நாட்டு மாணவர்களுக்கு பயிற்று வித்து வந்தார் ஆனந்த கண்ணன்.
குடல் புற்று நோய் :
இப்படி ஒரு நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன் டிஸ்கவரி தமிழ் தொலைக்காட்சியில் துவங்கிய சுவை என்ற நிகழ்ச்சியில் தொகுப்பாளராக களமிறங்கி இருந்தார். இவரது ரீ - என்ட்ரியை பார்த்து பலரும் மகிழ்ச்சியடைந்தனர். இப்படி ஒரு நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் இவர் திடீர் மரணமடைந்தார். இவருக்கு குடல் புற்று நோய் இருந்துள்ளது. அதற்கான சிகிச்சைகளை மேற்கொண்டும் வந்து உள்ளார்.
ஆனந்த கண்ணனின் மனைவி :
ஆனால், புற்று இவரது உடல் முழுதும் பரவிவிட்ட நிலையில் இவரது உடல் நிலை மோசமானதால் காலமானார். இவர் இறக்கும் போது அவருக்கு வயது 49. இவரது இறப்பு பலருக்கும் பெறும் அதிர்ச்சியை கொடுத்திருந்தது.ஆனந்த கண்ணனின் மறைவிற்கு பல பிரபலங்களும் இரங்கல் தெரிவித்தனர். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் இவரின் பிறந்தநாள் சென்று உள்ளது. கடந்த வருடம் ஆனந்த கண்ணன் கேக்குடன் இருப்பது போல் எடுத்த புகைப்படத்தை பதிவிட்டு தனது கணவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார் அவரின் மனைவி.