'ஆனந்தபுரத்து வீடு' குட்டி பையன் ஆர்யன் பாலாஜி செய்துள்ள உலக சாதனை என்ன தெரியுமா?

By krithika · 14/12/2024

'ஆனந்தபுரத்து வீடு' படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த ஆர்யன் பாலாஜியின் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. இந்த படம் கடந்து 2010 ஆம் ஆண்டு வெளியான ஒரு திரில்லர் படம். இப்படத்தை மர்ம தேசம், விடாது கருப்பு, சிதம்பர ரகசியம் உள்ளிட்ட தொலைக்காட்சி தொடர்களை இயக்கிய நாகா இயக்கியிருந்தார். இப்படத்தில் நந்தா, சாயா சிங் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள். இப்படம் இயக்குனர் நாகா இயக்கிய முதல் திரைப்படம் ஆகும்.

இயக்குனர் சங்கரின் எஸ் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. வசூல் ரீதியாகவும் இப்படம் சிறப்பான வெற்றியைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தவர் ஆர்யன் பாலாஜி. இவரின் தனித்துவமான நடிப்பு மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. ஆனால், அதற்குப் பிறகு இவரை எந்த திரைப்படங்களிலும் பார்க்க முடியவில்லை. இந்நிலையில் சமீபத்தில் அவர் பேட்டி அளித்துள்ளார்.

ஆர்யன் பாலாஜி பேட்டி:

அதில், எனக்கு இப்போ 19 வயது ஆகிறது ‌ நான் இப்போது பிஎஸ்சி எக்கனாமிக்ஸ் படித்துக் கொண்டிருக்கிறேன். நான் ஆனந்தபுரத்து வீடு படம் நடிக்கும் போது எனக்கு நாலு வயசு தான். எனக்கு 12 மாதம் இருக்கும்போது போட்டோ சூட் எல்லாம் நடத்தப்பட்டு இருக்கிறது. அதற்குப் பிறகு நிறைய அட்வர்டைஸ்மென்ட் நடித்திருக்கிறேன். அதையெல்லாம் பார்த்துவிட்டு தான் எனக்கு அனந்தபுரத்து வீடு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது.

ஆனந்தபுரத்து வீடு குறித்து :

இந்த படத்திற்காக ஆடிஷன் பண்ணும் போது சுமார் 100 குழந்தைகளுக்கு மேல் அங்கு இருந்தார்கள். ஆனால், நாகா சார்க்கு என்னை பிடித்து போய்விட்டது. அந்தப் படம் ரிலீஸ் ஆன பிறகு எல்லாரும் என்னை நோட் பண்ணி போட்டோ எடுக்கணும் என்றெல்லாம் கேட்டு இருக்கிறார்கள். அதெல்லாம் நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. அந்த படத்திற்கு பிறகு எனக்கு ஹிந்தி கஜினியில் கடைசி சீனில் நடக்க ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் 'ஆனந்தபுரத்து வீடு' படத்தில் தான் என்னை அறிமுகப்படுத்த வேண்டும் என்று அதில் நடிக்க வேண்டாம் என்று சொல்லிவிட்டார்கள்.

ஆர்யன் செய்த சாதனைகள்:

மேலும், எவரெஸ்ட் மலை ஏறுவது எல்லாம் முதலில் நாங்க பிக்னிக் மாதிரி தான் ஸ்டார்ட் பண்ணோம். முதலில் நேபால் கவர்மெண்ட் இது ரொம்ப ஆபத்தான விஷயம் என்று சொன்னார்கள். சாதாரணமாக எவரெஸ்ட் ஏறுவதற்கு 7-8 நாட்களாகும். ஆனால், நாங்கள் 20 - 25 நாட்கள் எடுத்துக் கொண்டோம். போகும் வழியில் எட்டு வயது பையனை எல்லாம் பார்த்தோம். அவர்கள் ரொம்ப டயர்ட் ஆக இருந்தார்கள். அதனால் நான் ரீச் ஆனால் நான் World Record கிரியேட் செய்வேன். அதனால் ட்ரை செய்து அதை முடித்தோம். நான் World Record கிரியேட் பண்ணும் போது எனக்கு ஆறு வயது என்று கூறியிருக்கிறார்.

View this post on Instagram

A post shared by Mangai Balasubramaniam (@vj_mangai)

அடுத்த படங்கள் ஏன் நடிக்கவில்லை :

நான் World Record கிரியேட் பண்ணும் போது எனக்கு ஆறு வயது என்று கூறியிருக்கிறார்.அதோடு 'ஆனந்தபுரத்து வீடு' படத்திற்கு பிறகு நான் ஏன் படம் பண்ண வில்லை என்றால் ஒரு படம் பண்ண ஏறக்குறைய இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது. அப்போது நான் ரொம்ப சின்ன பையன். அதனால் எங்க அம்மா நான் கொஞ்சம் நல்லா படிக்க வேண்டும் என்று நினைத்தார்கள். ஆனால் கண்டிப்பாக நான் தமிழ் படங்களில் கம் பேக் கொடுப்பேன். இப்போ நான் நல்லா தமிழ் கத்துக்கிட்டு இருக்கேன் என்று கூறியுள்ளார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full