கதறி கதறி அழுத வீடியோவை வெளியிட்ட புஷ்பா பட நடிகை - குழப்பத்தில் ரசிகர்கள்.

By Arun · 20/8/2023

புஷ்பா பட நடிகை கண்ணீர் விட்டு கதறி அழுத்திருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது. தெலுங்கில் தொலைக்காட்சி தொகுப்பாளராக தனது பயணத்தை துவங்கியவர் அனுசுயா. பின் இவர் சாக்ஷி டிவியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி இருந்தார். அதன் பின்பு இவர் பல டிவி நிகழ்சிகளில் தொகுப்பாளராகவும் இருந்தார். இந்த பிரபலத்தினால் இவருக்கு சினிமாவில் டப்பிங் பேசும் வாய்ப்பு கிடைத்து இருந்தது.

பின் இவர் வேதம், பைசா போன்ற பல படங்களில் டப்பிங் கலைஞராகவும் பணியாற்றி இருந்தார். அதிலும் இவர் ஜபர்தஸ்த் எனும் நகைச்சுவை நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி இருந்தார். இந்த நிகழ்ச்சியின் மூலம் அனுசுயா சினிமா வட்டாரங்களிலும் பிரபலமானார். அதன் பின் இவர் நாகார்ஜூனா நடிப்பில் வெளிவந்த சொக்கடே சின்னி நயனா என்னும் படத்திலும் நடித்து இருந்தார்.

அனுசுயா திரைப்பயணம்:

அதைத்தொடர்ந்து சக்ஷணம் எனும் படத்தில் நெகடிவ் கதாபத்திரத்தில் நடித்திருந்தார் அனுசுயா. இப்படி இவர் பல படங்களில் நடித்து இருக்கிறார். தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளிவந்து இருந்த புஸ்பா படத்திலும் அனுசுயா நடித்து இருந்தார். இந்த திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றி அடைந்து இருந்தது. இந்த படத்தில் அனுசுயா வில்லியாக நடித்திருந்தார். தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.

View this post on Instagram

A post shared by Anasuya Bharadwaj (@itsme_anasuya)

சோசியல் மீடியாவில் அனுசுயா:

அதிலும் அனுசியா நடித்து வருகிறார். அதே போல சமீபத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே சமயத்தில் வெளியான மைக்கேல் படத்தில் கெளதம் மேனனின் மனைவியாக அனுசுயா நடித்து இருந்தார். இதை அடுத்து இவர் பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, அனுசுயா எப்போதும் சோசியல் மீடியாவில் படு ஆக்டிவாக இருக்கிறார். அதிலும் சமீப காலமாக இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படு கவர்ச்சியாக புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார்.

அனுசுயா பதிவு:

இதனால் இவரை எக்கச்சக்கமான ரசிகர்களும் பாலோ செய்கிறார்கள். இந்த நிலையில் அனுசுயா பதிவிட்டிருக்கும் வீடியோ தான் தற்போது ரசிகர்கள் மத்தியில் கடுப்பை ஏற்றி இருக்கிறது. அதாவது அனுசுயா பதிவில், சமூக வலைத்தளங்கள் எதற்காக உருவாக்கப்பட்டது தெரியுமா? அந்த விஷயங்களுக்காக தான் தற்போது பயன்படுத்துகிறார்களா. நான் என்னுடைய போட்டோ சூட் புகைப்படங்கள், மகிழ்ச்சியாக இருக்கும் பதிவுகளை வெளியிடுவது போல இப்படி ஒரு நிலையில் இருக்கும் பதிவையும் வெளியேற்றி இருக்கிறேன்.

கடுப்பான ரசிகர்கள்:

ஐந்து நாட்களுக்கு முன் எடுத்த வீடியோ இது. இப்படி நான் நலமாக இருக்கிறேன் என்று கூறி கதறி கதறி அழும் வீடியோவை வெளியிட்டு இருக்கிறார். ஆனால், இவர் எதற்காக இப்படி கதறி அழுதார்? என்ன காரணம்? என்பது கடைசி வரையும் பதிவில் கூறவில்லை. தற்போது இவருடைய வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானதை தொடர்ந்து ரசிகர்கள் கடுப்பாகி எதற்கு? ஏன்? என்று கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full