புகைப்படத்தில் இருக்கும் பாப்பா இந்த பிரபல நடிகையா...? பாத்தா நம்பமாட்டீங்க.!
விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளினியாக இருந்து வருபவர் டிடி என்ற திவ்யதர்ஷினி, தொகுப்பாளினியாக ஜொலித்து வந்தாலும் சிறு வயதிலேயே சினிமாவிலும் ஒரு சில கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். சமீபத்தில் இவர் கவுதம் வாசுதேவன் இயக்கிய 'உலவிரவு' என்ற ஆல்பலத்திலும் நடித்திருந்தார்.
எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் டிடி தனது அன்றாட நடவடிக்கைகளையும் வித்யாசமான புகைப்படங்களையும் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக வைத்து வருகிறார். சமீபத்தில் தனது ட்விட்டர் பக்கத்தில் தனது குழந்தை பருவ புகைப்படம் ஒன்றை பதிவிட்டுள்ளார் டிடி. இந்த புகைப்படம் இவரது ரசிகர்களால் பெரிதும் விரும்பபட்டு வருகிறது.
விஜய் டிவியின் ஆஸ்தான தொகுப்பாளினியாக இருந்து வரும் டிடி, விஜய் டிவியில் ஒளிபரப்பான காபீ வித் டிடி என்ற நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட இவருக்கு 2017 ஆம் ஆண்டு விவாகரத்தும் நடைபெற்றது. விவாகரத்துக்கு பின்னரும் தனது தொகுப்பாளினி பணியை தொடர்ந்து செய்து வருகிறார் டிடி. 'காபி வித் டிடி' நிகழ்ச்சியின் மூலம் பல சினிமா பிரபலங்களை பேட்டி எடுத்த இவர், பல சினிமா நடிகர் நடிகைகளுக்கு மிகவும் பரிட்சியமான ஒரு நபராக இருந்து வருகிறார். அதே போல சிறு வயது முதல் தொலைக்காட்சியில் இருந்து வருவதால் சிறியவர் முதல் பெரியவர் வரை பல ரசிகர்களை வைத்துள்ளார் டி டி.Appola irundu ippo varaikum cycle matumdan ootta theriyum ?? pic.twitter.com/oLOiWH37bR
— DD Neelakandan (@DhivyaDharshini) September 26, 2018