விஜய் தொலைக்காட்சியில் எத்தனையோ தொகுப்பாளர்கள் வந்து சென்றாலும் ரசிகர்களின் ஆள் டைம் பேவரைட் தொகுப்பாளியனாக திகழ்ந்து வருகிறார் டிடி என்கிற திவ்யதர்ஷினி. இவர் 20 வருடங்கள் என்கிற நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதில் ஜாம்பவனாக திகழ்ந்து வருகிறார். எத்தனை ஆண்டுகளாக சினிமா துறையில் இருந்தாலும் இளமை ததும்பும் முகம் பாவம் உடையவர் திவ்யதர்ஷினி. நடிகை டிடி அவர்கள் வெள்ளித்திரை, சின்னத்திரை என எல்லாத் துறைகளிலும் ஒரு கலக்கு கலக்குகிறார்கள். திவ்யதர்ஷினி அவர்கள் தமிழ் திரைப் படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து உள்ளார். இவர் அண்ணா ஆதர்ஷ் கல்லூரியில் இளங்கலை, முதுகலைப் படிப்பை படித்து முடித்து உள்ளார்.

டிடி தன்னுடைய ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே டிவி நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக சின்னத்திரைக்கு அறிமுகமானவர். அது மட்டும் இல்லைங்க இவர் விஜய் தொலைக்காட்சிகளில் பல நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராக பங்கேற்று உள்ளார். ஜோடி நம்பர்-1, சூப்பர் சிங்கர், பாய்ஸ் vs கேர்ள்ஸ், ஹோம் ஸ்வீட் ஹோம், காபி வித் டிடி போன்ற பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இவருக்கு சிறந்த தொகுப்பாளினி என்ற பட்டத்தையும் வழங்கி உள்ளார்கள். இவர் தமிழ் சினிமாவிலும் ஒரு சில படங்களில் நடித்தும் உள்ளார். இவரை பெரும்பாலும் டிடி என்று தான் செல்லமாக அனைவரும் அழைப்பார்கள். இவருடைய நகைச்சுவை பேச்சு மக்களை மட்டுமில்லாமல் பல சினிமா நட்சத்திரங்களையும் கவர வைத்துள்ளது. அந்த அளவிற்கு தன்னுடைய பேச்சு திறனாலும் சுட்டிதனத்தாலும் அனைவரையும் கட்டி இழுத்தவர்.

Advertisement

ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வேண்டும் என்றால் அங்கு நம்ம திவ்யதர்ஷினி பெயர் தான் முதலில் வந்து நிற்கும். இந்நிலையில் டிடி அவர்களின் மேக்கப் இல்லாத புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பொதுவாகவே ரசிகர்கள் நடிகைகளை தேவதைகள், அழகி, பேரழகி என்று பல பெயர்களை வைத்து கூப்பிடுவார்கள். ஆனால், அவர்கள் நிஜ வாழ்க்கையில் பார்த்தால் சாதாரணமாக தான் இருப்பார்கள். அந்த வகையில் பல நடிகைகள் மேக்கப் இல்லாமல் தங்களுடைய நிஜ வாழ்க்கையில் எப்படி இருப்பார்கள் என்று புகைப்படங்களை சோசியல் மீடியாவில் வெளியிட்டு வருவது அனைவருக்கும் தெரிந்ததே.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் திவ்யதர்ஷினியும் ஒருவர். இவர் சமீப காலமாகவே கவர்ச்சி ஆடைகளில் உலா வந்து கொண்டிருக்கிறார். டிடி அவர்கள் தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் டான்ஸ் சூப்பர் டான்ஸ் என்ற நிகழ்ச்சியில் நடுவராகவும், ஸ்பீட் கோ என்ற ரியாலிட்டி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியும் வருகிறார். சில நாட்களுக்கு முன் கூட இவர் பிகினி உடையில் இருக்கும் புகைப்படத்தை சோசியல் மீடியாவில் வெளியிட்டு இருந்தார். இது பயங்கர சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் எல்லாம் ஷாக் ஆகி விட்டார்கள். இந்நிலையில் டிடி அவர்கள் மேக்கப்புக்கு முன், மேக்கப்பிற்கு பின் என்று ஒரு புகைப்படத்தை எடுத்து வெளியிட்டு உள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் எல்லோரும் ஆச்சரியத்தில் உள்ளார்கள். மேலும், இந்த புகைப்படத்தை பார்த்து டிடியா? இது என்று ரசிகர்கள் கிண்டல், கேலி செய்தும் வருகின்றனர்.

Advertisement
Advertisement