தொகுப்பாளினி மணிமேகலை- உசேன் சொன்ன குட் நியூஸ், குவியும் வாழ்த்துக்கள்

By subhashini · 23/5/2026

சன் மியூசிக்கில் ஒரு காலத்தில் பிரபலமான விஜேவாக வலம் வந்தவர் மணிமேகலை. அதன் பின் இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் பல நிகழ்ச்சிகளை தொகுத்து மக்கள் மத்தியில் பிரபலமான தொகுப்பாளினியாக வலம் வருகிறார். இதனால் இவருக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகி இருக்கிறது. இதனிடையே மணிமேகலை- உசேன் நீண்ட வருடமாக காதலித்து வந்தார்கள். ஆனால், இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதிக்காததால் பெற்றோர்களின் எதிர்ப்புகளை மீறி இருவரும் ரிஜிஸ்டர் மேரேஜ் செய்து கொண்டார்கள்.

மணிமேகலை திருமணத்திற்கு பின்னும் தொடர்ந்து நிகழ்ச்சியில் தொகுப்பாளராக இருந்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபலமான நிகழ்ச்சியான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மணிமேகலை பிரபலம் அடைந்தார் முதலில் அந்த நிகழ்ச்சியில் கோமாளியாக வந்த இவர் பிறகு, ‘குக் வித் கோமாளி சீசன் 5’ நிகழ்ச்சியை ரக்ஷனோடு சேர்ந்து தொகுத்து வழங்கினார்.

மணிமேகலை குறித்த தகவல்:

பின் அந்த சீசனில் தொகுப்பாளினி பிரியங்காவுடன் ஏற்பட்ட சர்ச்சையால் அந்த நிகழ்ச்சியில் இருந்து மணிமேகலை விலகினார். பின் மணிமேகலை ஜீ தமிழில் ஒளிபரப்பான டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். மேலும், இந்த தம்பதி youtube சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்கள். இந்த சேனலில் இவர்கள் தங்களது வாழ்க்கையில் நடக்கும் முக்கியமான தருணங்களையும், புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார்கள். இதனால் இவர்களை லட்சக்கணக்கான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். மணிமேகலை அவர்கள் கொரோனா காலகட்டத்தில் கிராமம் ஒன்றில் சொந்தமாக நிலம் வாங்கி அங்கு பண்ணை வீட்டை கட்டி இருந்தது அனைவரும் அறிந்தது.

மணிமேகலை சொந்த வீடு:

அதற்கு HM லேண்ட் என பெயர் வைத்து வீடியோவையும் வெளியிட்டு இருந்தார். அதற்குப் பின் இவர் சென்னையில் அப்பார்ட்மெண்ட் ஒன்றை வாங்கி இருந்தார். அதே போல் இரண்டு சொகுசு கார்கள், சொகுசு பைக் என்று தன்னுடைய வாழ்க்கையில் அடுத்தடுத்த கட்டத்தை நோக்கி மணிமேகலை சென்று கொண்டு இருக்கிறார். சில மாதங்களுக்கு முன்பு கூட மணிமேகலை, சென்னையில் ஒரு புதிய சொகுசு அப்பார்ட்மெண்ட் ஒன்றை வாங்கி இருந்தார்.

View this post on Instagram

A post shared by NAVEENKUMAR M (@biggboss_naveen_)

மணிமேகலை சொன்ன குட் நியூஸ்:

ஆரம்பத்தில் வீட்டு வாடகை கூட கட்ட முடியாமல் தவித்த மணிமேகலை- உசைன் தற்போது சொந்தமாக கார், பைக், வீடுகள் என்று வாங்கி குவித்து இருக்கிறார்கள். இப்படி இருக்கும் நிலையில் தற்போது மணிமேகலை சொல்லி இருக்கும் குட் நியூஸ் தான் வைரலாகி வருகிறது. அதாவது மணிமேகலை அவர்கள் தன்னுடைய புதிய வீடு கிரகப்பிரவேசம் நடத்த இருக்கிறார். தற்போது இது தொடர்பான பத்திரிகையை தான் அவர் சோசியல் மீடியாவில் வெளியிட்டு இருக்கிறார். இதை பார்த்து ரசிகர் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்

Tamil Behind Talkies AMP · Quick view
View full