மாஸ்டர் படத்திற்காக எடுத்த அம்பு பயிற்சி வீடியோவை வெளியிட்ட ஆண்ட்ரியா - பங்கம் செய்யும் நெட்டிசன்கள்.

By Rajkumar · 15/1/2021

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'மாஸ்டர்' திரைப்படம் கடந்த ஜனவரி 14 வெளியாகி இருந்தது. விஜய், விஜய் சேதுபதி, ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், மாஸ்டர் மஹிந்தரன், சாந்தனு, அர்ஜுன் தாஸ், சஞ்சீவ், ஸ்ரீமன், ஸ்ரீநாத், கௌரி கிஷன் என்று பல்வேறு நட்சத்திர பட்டாளங்கள் நடித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார், சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த திரைப்படம் எப்போதோ வெளியாக இருந்த நிலையில் கொரோனா பிரச்சனை காரணமாக தள்ளிப்போயிக்கொண்டு இருந்த நிலையில் நேற்று இந்த படம் வெளியாகி இருந்தது. கொரோனா பிரச்சனை காரணமாக திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டும் தான் அனுமதிக்கபடுகின்றனர்.

https://twitter.com/AjithLSiva/status/1349982606658424832

இந்த படத்திற்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு படித்திருந்தாலும் பொதுவான ரசிகர்கள் மத்தியில் இந்த திரைப்படம் கொஞ்சம் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது என்பதுதான் உண்மை. மாநகரம், கைதி போன்ற படங்களில் தன்னுடைய தனித்துவத்தை நிரூபித்து இருந்த லோகேஷ் கனகராஜ் இந்த படத்தில் விஜய் ரசிகர்களுக்காக தன்னுடைய கொள்கையை தளர்த்து முழு கமர்சியல் படமாக மாஸ்டர் படத்தை கொடுத்திருக்கிறார். இருப்பினும் இந்த திரைப்படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய இருவரின் மாஸ் ரசிகர்களுக்கு படித்திருந்தாலும் படத்தின் திரைக்கதை கொஞ்சம் சுதப்பி இருக்கிறது.

பல்வேறு விமர்சகர்களும் இந்த படத்திற்கு சுமாரான விமர்சனத்தை தான் அளித்து வருகின்றனர். அதே போல இந்த படத்தில் விஜய்யை விட விஜய் சேதுபதிக்கு தான் மாஸ் ஏற்பட்டு இருக்கிறது என்று பலரும் கருத்து கூறி வருகின்றனர். இந்த படத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆண்ட்ரியாவின் கதாபாத்திரம் ரசிகர்களை பெரும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இந்த படத்தில் ஆண்ட்ரியாவின் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை என்று பலரும் பல்வேறு விதமான மீம்களை பகிர்ந்து வருகின்றனர்.

அதிலும் சம்மந்தமே இல்லாமல் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் ஆண்ட்ரியா வில் அம்பை வைத்து லாரிகளை தாக்கும் காட்சிகள் கேலிக்கு உள்ளாகி இருக்கிறது. இப்படி ஒரு நிலையில் நடிகை ஆண்ட்ரியா, மாஸ்டர் படத்திற்காக வில் அம்பு பயிற்சயில் ஈடுபட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்றை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் பலரும் கண்ட மேனிக்கு கேலி செய்து கமன்ட் செய்து வருகின்றனர். அதில் ஒரு சில கமன்ட்கள் இதோ.

behindtalkies AMP · Quick view
View full