அங்காடி தெரு பட நடிகரின் தற்போதைய நிலை.!அவருக்கு ஏற்பட்ட சோகம்.!

By Rajkumar · 28/5/2019

இயக்குனர் வசந்த பாலன் இயக்கத்தில் கடந்த 2010 ஆம் ஆண்டு வெளியான 'அங்காடித்தெரு' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. சென்னையில் உள்ள பிரபல ஜவுளிக்கடையில் பணிபுரியும் வறுமையான கிராமத்து இளைஞர்கள் படம் கஷ்டத்தை தோலுரித்து காட்டியது இந்த படம்.

இந்த படத்தில் புதுமுக நடிகராக அறிமுகமாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகர் மகேஷ்.  மகேஷ். 'அங்காடித் தெரு' படத்துக்குப் பிறகு, சில படங்களில் நடித்தாலும் அதன் பின்னர் என்னவாணர் என்று தெரியவில்லை. சமீபத்தில் இவர் தனியார் பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் பேசிய மகேஷ், நான் சினிமாவுல நடிக்கிறேன்னு சொன்னப்போ, யாருமே நம்பல. 'அங்காடித் தெரு' போஸ்டர்கள் ரிலீஸ் ஆனப்போதான், நம்புனாங்க. எனக்கு முன்னாடியே அஞ்சலி சினிமாவுக்கு வந்துட்டாங்க. அதனால, அவங்ககிட்டதான் நடிப்பு பற்றிக் கேட்பேன்.

படம் ரிலீஸ் ஆச்சு, பெரிய ஹிட்டாச்சு. நான் எங்கே போனாலும், பலரும் வந்து ஆட்டோகிராப் வாங்குனாங்க. இந்தச் சூழல்ல வந்திருந்தா, செல்ஃபி எடுத்திருப்பாங்க. அவ்ளோதான்... நாம வாழ்க்கையில ஜெயிச்சுட்டோம்னு நினைச்சேன். ஆனா, ஜெயிக்க இன்னும் ஓடிக்கிட்டேதான் இருக்கேன் க்கு நிறைய விஷயங்களைச் சொல்லிக் கொடுத்தாங்க.

சினிமாவுல ஸ்டெடியா நிற்க என்ன செய்யணும், எப்படிக் கதைகளைத் தேர்ந்தெடுக்கணும்னு சொல்லித்தர யாரும் இல்லை. அதனால, தேடி வந்த பல நல்ல கதைகளை மிஸ் பண்ணிட்டேன். அதர்வா நடிச்ச 'ஈட்டி' படத்துல நடிக்க டைரக்டர் என்னைத்தான் முதலில் கேட்டார். 'சுந்தர பாண்டியன்' படத்துல விஜய் சேதுபதி ரோல் எனக்குத்தான் வந்தது. 'மாயாண்டி குடும்பத்தார்' படத்துல நடிக்கக் கிடைச்ச வாய்ப்பையும் தவரவிட்டுட்டேன். 

Tamil Behind Talkies AMP · Quick view
View full