நீதிக்காக போராடும் விளையாட்டு வீரரின் 'அங்கீகாரம்' படம் எப்படி இருக்கு?

விளையாட்டு வீரரின் 'அங்கீகாரம்' படம் முழு விமர்சனம் இதோ

By subhashini · 26/6/2026

அறிமுக இயக்குனர் தென்பதியன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் அங்கீகாரம். இந்த படத்தில் கே.ஜே. ராஜேஷ் நடித்திருக்கிறார். இவர் இந்த படத்தின் மூலம் தான் சினிமாவில் ஹீரோவாக நடிக்கிறார். இதற்கு முன்பு இவர் தயாரிப்பாளராக இருந்தார். இன்று அதிக எதிர்பார்ப்பில் வெளியாகிருக்கும் அங்கீகாரம் படம் ரசிகர் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் ஹீரோ கே.ஜே ராஜேஷ் ஒரு தடகள வீரராக இருக்கிறார். இவர் சர்வதேச அளவில் நடைபெறும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் கலந்துகொண்டு வெல்வதை தான் தன்னுடைய லட்சியமாக நோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார். இதற்காக இவர் ரொம்பவே கடுமையாக பயிற்சி எல்லாம் எடுத்து வருகிறார். இன்னொரு பக்கம் இவருடைய குடும்பம் மிகவும் வறுமையில் இருக்கிறது. ஹீரோ உடைய அம்மா தூய்மை பணியாளராக வேலை செய்கிறார். இவருடைய தங்கை கல்லூரியில் படிக்கிறார். தன்னுடைய குடும்பத்தின் நிலையை மாற்ற வேண்டும் என்றால் காமன்வெல்த் போட்டி விளையாட்டில் பங்கு பெற்று வெற்றி பெற வேண்டும் என்று கடுமையாக பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார் ஹீரோ.

இருந்தாலும் இவரை சுற்றி அரசியல் தாக்குதல்கள் நடக்கிறது. இதனை எதிர்கொள்ளும் நிலமைக்கு ஹீரோ தள்ளப்படுகிறார். மேலும், தேசிய அளவில் நடைபெற்ற 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் ஹீரோ சாதனையும் படைக்கிறார். அந்த போட்டியில் இவருக்கு தசை பிடிப்பு ஏற்படுகிறது. இவர் என்னதான் சாதனை செய்தாலும் அதிலிருந்து மீண்டு வந்து கம்பேக் கொடுக்கிறார். ஆனால், ஹீரோவை எப்படியாவது நிராகரிக்க வேண்டும் என்பதற்காக

தசைப்பிடிவை காரணமாக கொண்டு அவரை காமன்வெல்த் போட்டியில் கலந்துகொள்ள தேர்வு செய்ய மறுக்கிறார்கள். பல மாதங்கள் போராடியும் ஹீரோவிற்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால் நீதிமன்றத்தை நாடுகிறார். அங்கும் அவருக்கு எதிர்பார்த்த தீர்ப்பு கிடைக்காமல் போய்விடுகிறது.

ஒரு கட்டத்தில் இந்தியாவில் நடக்க இருக்கும் காமன்வெல்த் போட்டிக்கு தடை விதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் ஹீரோ வழக்கு தொடர்கிறார். ஹீரோ தொடர்ந்த வழக்கு நீதி பெற்றதா? ஹீரோ எதிர் கொண்ட பிரச்சனைகள் என்ன? ஹிரோவின் லட்சியம் நிறைவேறியதா? குடும்பத்தின் நிலை மாறியதா? என்பது தான் படத்தினுடைய மீதி கதை. தமிழ் சினிமாவின் தயாரிப்பாளராக வலம் வந்த கே ஜே ராஜேஷ் இந்த படத்தில் ஹீரோவாக கலக்கியிருக்கிறார்.

இந்த படத்திற்காக இவர் எடுத்துக் கொண்ட முயற்சிகள், போட்டோ உழைப்பு அனைத்துமே சிறப்பாக இருக்கிறது. விளையாட்டு வீரர் எப்படி எல்லாம் தன் வாழ்க்கையில் கஷ்டப்பட்டு முன்னேறுகிறார் என்பதை தன்னுடைய நடிப்பின் மூலம் வெளிப்படுத்தி இருப்பது பாராட்டுக்குரிய விஷயம். இரண்டாம் பாதியில் இவர் நீதிக்காக நடித்த காட்சிகள் எல்லாம் கிளாப்ஸ்களை வாங்கி இருக்கிறது. சிறப்பாக முதல் படம் என்று சொல்ல முடியாத அளவிற்கு தன்னுடைய நடிப்பை ராஜேஷ் வெளிப்படுத்தி இருக்கிறார். அதிலும் கிளைமாக்ஸில் அவருடைய மொத்த உணர்வையும் கொட்டி தீர்த்து இருக்கிறார் என்று சொல்லலாம்.

இவரை அடுத்து ஹீரோவின் அம்மாவாக நடித்திருக்கும் நடிகை ரமாவும் தன்னுடைய சிறப்பான வேலையை செய்து முடித்து இருக்கிறார். தூய்மை பணியாளர்கள் எப்படி எல்லாம் மனதளவிலும் உடல் அளவிலும் கஷ்டப்படுகிறார்கள் என்பதை ரமா தன்னுடைய உணர்வுபூர்வமான நடிப்பின் மூலம் காண்பித்திருக்கிறார்.

இவர்களைத் தொடர்ந்து படத்தில் வரும் ஒவ்வொரு காட்சிகளையும் இயக்குனர் அழகாகவும் எமோஷனல் ஆகவும் காட்டிருக்கிறார். அறிமுக இயக்குனராக இருந்தாலும் கதைக்களத்தை எடுத்த விதமும் கொண்டு சென்ற விதமும் பாராட்டுக்குரிய விஷயம். பொதுவாகவே ஒரு விளையாட்டு என்றாலே கிரிக்கெட்டை அடிப்படையாக வைத்து தான் எடுப்பார்கள். ஆனால், அதையும் தாண்டி பல விளையாட்டுகள் உள்ளது. அதற்காக பல லட்சம் பேர் உழைக்கிறார்கள், அர்ப்பணிக்கிறார்கள் என்பதை இந்த படத்தில் இயக்குனர் சுட்டிக்காட்டி இருக்கிறார்.

பல உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து தான் இந்த படத்தை இயக்குனர் எடுத்திருக்கிறார். குறிப்பாக நீதிமன்ற காட்சிகள் எல்லாம் மெய்சிலிர்க்க வைத்திருக்கிறது. வசனங்கள் படத்திற்கு மிகப்பெரிய பலம். அதை தாண்டி பின்னணி இசை, ஒளிப்பதிவு, டெக்னிக்கலாக அனைத்து விஷயமும் சுவாரசியமாக இருக்கிறது. மொத்தத்தில் குடும்பத்துடன் எல்லோரும் சென்று பார்க்கும் படமாக தான் இருக்கிறது.

நிறை:

கே ஜே ராஜேஷின் நடிப்பு சிறப்பு

நடிகர்கள் தங்களுக்கு கொடுத்த வேலை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

எமோஷனல் காட்சிகள்

சமூகத்திற்கு நல்ல மெசேஜ்

நீதிமன்ற காட்சிகள், கிளைமாக்ஸ் தூள்

பின்னணி இசை ஒளிப்பதிவு படத்திற்கு பக்கபலம்

குறை:

முதல் பாதி கொஞ்சம் பொறுமையாக செல்கிறது

மற்றபடி படத்தில் சொல்லிக் கொள்ளும் அளவிற்கு குறைகள் எதுவுமே இல்லை

மொத்தத்தில் அங்கீகாரம் - உணர்வுபூர்வ கதை

Tamil Behind Talkies AMP · Quick view
View full