இந்தியாவின் மிக பெரிய கட்சிகளில் ஒன்று பாரதிய ஜனதா கட்சி. தற்போது தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சி வளர்ந்து கொண்டு இருப்பதாக அரசியல் வல்லுனர்கள் கருத்துகளை தெரிவித்து வந்தனர். இதற்கிடையில் சொந்த கட்சி உறுப்பினரையே தாக்கிய சென்னை கிழக்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளர். இந்த செய்தியானது இணையத்தில் பரவி வருகிறது. தற்போது தமிழக பிஜேபியின் தலைவர் அண்ணாமலை என் மண் என் மக்கள் என்ற தலைப்பில் பாதயாத்திரை நடத்தி கொண்டு இருக்கிறார். இதற்கிடையில் இந்த செய்தியானது கட்சியினரிடம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழக பாஜக:

தமிழக பிஜேபி கட்சியோ தமிழகத்தில் பல போராட்டங்களை நடத்தி வருகிறது. தற்போது தமிழக பிஜேபியின் மாநில தலைவர் தமிழகத்தில் “என் மண் என் மக்கள்” என்ற தலைப்பில் பாதயாத்திரையை நடத்தி வருகிறது. இந்த பாதயாத்திரையானது ஜூலை 27 அன்று ராமேஸ்வரத்தில் மத்திய உள்துறை அமைச்சர்  அமித்ஷா பாதயாத்திரையை தொடங்கி வைத்தார். இது இந்த மண்ணோடும் மக்களோடும் இதயத்தோடு இதயமாக நின்று உறவாடும் ஒரு நடை பயணம். என் மண், என் மக்கள் என்று அமித்ஷா  குறிப்பிட்டிருந்தார். இதில் தமிழகத்தில் உள்ள கூட்டணி கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அதில் அந்தந்த கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.   

Advertisement

ஒரே கட்சியில் அடிதடி:

தற்போது மது விழிப்புணர்வு பற்றி தமிழகத்தில் சில இடங்களில் போரட்டங்கள் நடைபெற்று வந்தது. அதில் பங்கு பெற்று போராட்டம் நடத்திய பாரதிய ஜனதா கட்யின் சென்னை கிழக்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.சுப்பையா. பொது இடங்களில் மது ஒழிப்பு குறித்து பேசிவிட்டு தனது உணவகத்திற்குள் மது அருந்தி வந்துள்ளார் சென்னை கிழக்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.சுப்பையா. இதனை கண்ட அதே கட்சியை சேர்ந்த பாஜக ஐடி பிரிவு செயலாளர் ராஜேஷ் சேர்ந்த விடியோ எடுத்து அதை சமூகவலைத்தளங்களில் பகிர்ந்துள்ளார்.

இதனை கண்டு கோபமுற்ற சென்னை கிழக்கு மாவட்ட பாஜக பொதுச்செயலாளர் எஸ்.எஸ்.சுப்பையா விடியோவை சமுக ஊடகங்களில் பரப்பிய  ராஜேஷின் வீட்டிற்கு ஆதரவாளர்களுடன் சென்று அவரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளார். காயமடைந்த தற்போது ராஜேஷ் குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இந்நிலையில் ராஜேஷ் மீது தாக்குதல் நடத்திய எஸ்‌.எஸ்.சுப்பையா மீது அவதூறாக பேசுதல்,

Advertisement

தானாக சென்று தாக்குதல் நடத்தியது, மிரட்டல் விடுவித்தல் ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து பழவந்தாங்கல் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த செய்தியானது தமிழக பாரதிய ஜனதா கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

Advertisement
Advertisement