தனுஷ் படத்தில் அஜித்தின் மகள் இணைந்திருக்கும் தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கோலிவுட்டில் மிக பிரபலமான முன்னணி நடிகராக திகழ்பவர் தனுஷ். இவர் சினிமா உலகில் நடிகராக மட்டுமில்லாமல் திரைப்பட தயாரிப்பாளர், பின்னணிப் பாடகர், திரைப்பட பாடலாசிரியர், தயாரிப்பாளர் என பல துறைகளில் தன்னுடைய திறமையை காண்பித்து வருகிறார். சமீப காலமாக இவர் நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் சூப்பர் ஹிட் கொடுத்து இருக்கிறது.

அந்த வகையில் கடந்த ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்த படம் திருச்சிற்றம்பலம். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இதனை அடுத்து இவர் நானே வருவேன், மாறன் போன்ற படங்களில் நடித்து இருந்தார். இந்த படங்கள் எல்லாம் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. மேலும், இவர் பாலிவுட், ஹாலிவுட் படங்களிலும் பிசியாக நடித்து இருந்தார். இதனை அடுத்து சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாக இருந்த படம் வாத்தி.

Advertisement

தனுஷ் திரைப்பயணம்:

இப்படத்தை வெங்கி அட்லூரி இயக்கி இருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றிருந்தது. இதனை தொடர்ந்து தற்போது தனுஷ் அவர்கள் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற படத்தில் நடித்து இருக்கிறார். இந்த படத்தில் பிரியங்கா அருள் மோகன் கதாநாயகியாக நடித்து இருக்கிறார். இந்த படத்தில் தனுஷ் மற்ற படங்களை போல இல்லாமல் கொஞ்சம் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக தடி மற்றும் முடியை வளர்த்திருந்தார்.

தனுஷ் நடிக்கும் படங்கள்:

இந்த படம் 1930 காலத்தில் இருந்த மதராஸ் மாகாணத்தை மையமாக வைத்து எடுக்கப்படுகிறது. மேலும், கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்புகள் சமீபத்தில் நிறைவடைந்த நிலையில் அதன் பார்ஸ்ட் லுக் போஸ்டரானது வெளியிடப்பட்டது. நானே வருவேன், வாத்தி படங்கள் எல்லாம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி அடையவில்லை. இதனால் அனைவருமே கேப்டன் மில்லர் படத்தின் படத்தின் மீது அதிக எதிர்பார்ப்பு வைத்திருக்கிறார்கள்.

Advertisement

அனிகா குறித்த தகவல்:

தற்போது தனுஷ் தன்னுடைய ஐம்பதாவது படத்தில் நடிக்க இருக்கிறார் இதற்காக இவர் மொட்டை அடித்திருக்கிறார். இதற்கான புகைப்படங்கள் எல்லாம் சமீபத்தில் இணையத்தில் பயங்கர ட்ரெண்டிங் ஆகி இருந்தது. இந்த படத்திற்கு ராயன் என்று பெயர் வைத்திருக்கிறார். இந்த படத்தை தனுஷே இயக்கி நடிக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த நிலையில் தனுஷ் படத்தில் அஜித்தின் மகள் இணைந்திருக்கும் தகவல் வைரலாகி வருகிறது.

Advertisement

தனுஷ் படத்தில் அனிகா:

அதாவது, என்னை அறிந்தால், விசுவாசம் போன்ற படத்தில் அஜித்தின் மகளாக நடித்திருந்தவர் நடிகை அனிகா சுரேந்திரன். இவர் மலையாள சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து இவர் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து இருக்கிறார். தற்போது நடிகை அனிகா அவர்கள் ஹீரோயினியாக நடிக்கிறார். இந்த நிலையில் இவர் தனுஷின் ஐம்பதாவது படத்தில் இணைந்திருக்கிறார். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகி இருக்கிறது. இவர் இந்த படத்தில் தனுஷின் சகோதரியாக நடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறி வருகிறார்கள்.

Advertisement