500 ரூபாய் சம்பளத்தில் இருந்த சந்தோசம், கோடிகளில் இல்லை - பாடகர் அனிருத் ஓபன் டாக்
தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் அனிரூத். இவர் இசையமைப்பாளர் மட்டுமில்லாமல் பாடகரும் ஆவார். இவர் ரஜினிகாந்தின் உறவினார் ஆவார். இவர் தந்தை ரவி ராகவேந்திரர் பிரபல நடிகர் ஆவார். மேலும், தனுஷ் நடிப்பில் வெளியாகியிருந்த மூன்று படத்தின் மூலம் தான் அனிருத் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார்.
முதல் படத்திலே இவரின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து இவர் ரஜினி, கமல், விஜய், அஜித், சிவகார்த்திகேயன், தனுஷ், சூர்யா என பல டாப் நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இவர் இசையில் வெளிவந்த பாடல்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது.
அனிருத் திரைப்பயணம்:
அந்த வகையில் ரஜினிகாந்த் நடிப்பில் வந்த கூலி என்ற படத்திலும் அனிருத் தான் இசையமைத்திருந்தார். இதற்கு முன்பு ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர், வேட்டையன் படங்களிலும் அனிருத் தான் இசையமைத்திருந்தார். அந்த பாடல்கள் எல்லாம் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்து இருந்தது. பின் கமலின் இந்தியன் 3, சிவகார்த்திகேயனின் மதராஸி, இது தவிர தெலுங்கு மற்றும் இந்தி என பல மொழி படங்களில் அனிருத் பணியாற்றி வருகிறார்.
அனிருத் பேட்டி:
தற்போது அனிருத் அவர்கள் விஜய்யின் நடிப்பில் உருவாகி இருக்கும் ஜனநாயகன் என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் வினோத் என்பவர் இயக்கி இருக்கிறார். அதுமட்டும் இல்லாமல் அனிருத் அவர்கள் இசை நிகழ்ச்சிகளையும் நடத்திக் கொண்டு வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனிருத், சின்ன வயதில் நான் திருமண நிகழ்ச்சிகள் எல்லாம் வாசிக்க சென்றிருந்தேன்.
சம்பளம் பற்றி சொன்னது:
அப்போது எனக்கு 500 ரூபாய் சம்பளம் கொடுத்தார்கள். அப்போது அது எனக்கு ஒரு இனம் புரியாத சந்தோஷத்தை கொடுத்தது. சில நிகழ்ச்சிகளில் சம்பளம் தராமல் வெறும் வெற்றிலை பாக்கு மட்டும் கொடுத்து நன்றி சொல்லி அனுப்பி விடுவார்கள். இப்போது நான் கோடிகளில் சம்பளம் வாங்குகிறேன். இருந்தாலும் பரபரப்பாக இசைப்பணியில் மூழ்கி இருக்கிறேன். இருந்தாலும் முன்பிருந்த சந்தோஷம் இப்போது கிடையாது. என்னதான் வேலையில் பரபரப்பாக இருந்தாலும் அந்த சிறு வயது சந்தோஷத்தை மட்டுமே மறக்க முடியாது என்று கூறியிருக்கிறார்.