நமக்கே சில படங்கள் ஓடாதுன்னு தெரியும், ஆனால் அதை செய்தால் தப்பு - அனிருத் ஓபன் டாக்

By subhashini · 6/8/2025

தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் அனிருத். இவர் இசையமைப்பாளர் மட்டுமில்லாமல் பாடகரும் ஆவார். இவர் ரஜினிகாந்தின் உறவினார் ஆவார். இவரின் தந்தை ரவி ராகவேந்திரர் பிரபல நடிகர் ஆவார். மேலும், தனுஷ் நடிப்பில் வெளியாகியிருந்த மூன்று படத்தின் மூலம் தான் அனிருத் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். முதல் படத்திலே இவரின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

அதனை தொடர்ந்து இவர் ரஜினி, கமல், விஜய், அஜித், சிவகார்த்திகேயன், தனுஷ், சூர்யா என பல டாப் நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இவர் இசையில் வெளிவந்த பாடல்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. தற்போது அனிருத் அவர்கள் விஜய்யின் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் வினோத் என்பவர் இயக்குகிறார். இதை அடுத்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் கூலி என்ற படத்திலும் அனிருத் தான் இசையமைத்திருக்கிறார்.

கூலி படம்:

இந்த படத்தை லோகேஷ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
இந்த படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். அதேபோல் இந்த படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா, கன்னட நடிகை ரச்சிதா ராம், தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா, மலையாள நடிகர் சௌபின் சாகிர், ஆமீர் கான் உட்பட பலர் நடிக்கிறார்கள். சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு முடிவடைந்தது.

படம் குறித்த தகவல்:

இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தினுடைய இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் அமீர்கான், நாகர்ஜுனா, சௌபின் சாகிர் உட்பட கூலி படத்தின் பிரபலங்கள் பலர் கலந்து இருந்தார்கள். இதில் ரஜினி பேசியிருந்த விஷயங்கள் எல்லாம் இணையத்தில் படு வைரல் ஆகி வருகிறது. அதன் பின் கூலி படம் ஒரு சயின்ஸ் பிக்சன் படம், டைம் ட்ராவல் மையப்படுத்திய கதை என்றெல்லாம் சோசியல் மீடியாவில் செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது.

அனிருத் பேட்டி:

இது ஒரு பக்கம் இருக்க அனிருத் எப்போதுமே தான் இசையமைத்து இருக்கும் படங்களில் ரிலீசுக்கு முன்னால் அந்த படம் பற்றி ஒரு டீவ்ட் போடுவார். அவர் போடும் டீவ்ட்டுக்கே பலரும் எதிர்பார்த்து காத்திருப்பார்கள். ஆனால், இந்த மாதிரியான விஷயங்கள் இப்போது அனிருத் தவிர்த்து விட்டார். இந்நிலையில் இது தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் அனிருத், இப்போது ட்விட் போடுவது கிடையாது. அதை நான் நிறுத்தி விட்டேன். நமக்கே சில படங்கள் ஓடாதுன்னு தெரியும்போது நாம் அந்த ட்விட்டர் போட்டால் தப்பாகிவிடும் .

டீவ்ட் போடாத காரணம்:

அதனால்தான் அதை நிறுத்திவிட்டேன். எனக்குமே அது கூடுதல் அழுத்தத்தையும் கொடுத்தது. அனிருத் இந்த படத்துக்கு இன்னும் ட்விட் போடலையே ஒருவேளை படம் அப்படி இருக்குமோ என்றெல்லாம் யோசிப்பார்கள். அதனால் தான் நிறுத்திவிட்டேன். அன்னைக்கு ஒரு நாள் அந்த ட்விட்டை பீல் பண்ணி போட்டேன். அது என்னை பேக்ஃபையர் ஆக்கிவிட்டது. ஆனால், உண்மையாகவே நான் கூலி படத்தை என்ஜாய் பண்ணி பார்த்தேன். கூலி படத்துக்கு இந்த காணொளி மூலமாக பயர் இமோஜி கொடுக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full