ஐடியா கிடைக்கலனா பாட்டை இப்படி தான் எழுதுவேன் - ராக் ஸ்டார் அனிருத் ஓபன்டாக்

By subhashini · 6/8/2025

கூலி படம் தொடர்பாக இசையமைப்பாளர் அனிருத் அளித்து இருக்கும் பேட்டி தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் அனிருத். இவர் இசையமைப்பாளர் மட்டுமில்லாமல் பாடகரும் ஆவார். இவர் ரஜினிகாந்தின் உறவினார் ஆவார். இவரின் தந்தை ரவி ராகவேந்திரர் பிரபல நடிகர் ஆவார். மேலும், தனுஷ் நடிப்பில் வெளியாகியிருந்த மூன்று படத்தின் மூலம் தான் அனிருத் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார்.

முதல் படத்திலே இவரின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.
அதனை தொடர்ந்து இவர் ரஜினி, கமல், விஜய், அஜித், சிவகார்த்திகேயன், தனுஷ், சூர்யா என பல டாப் நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இவர் இசையில் வெளிவந்த பாடல்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. தற்போது அனிருத் அவர்கள் விஜய்யின் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார்.

கூலி படம்:

இந்த படத்தை இயக்குனர் வினோத் என்பவர் இயக்குகிறார். இதை அடுத்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் கூலி என்ற படத்திலும் அனிருத் தான் இசையமைத்திருக்கிறார். இந்த படத்தை லோகேஷ் இயக்கி இருக்கிறார். இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்திற்கு அனிருத் தான் இசையமைக்கிறார். இந்த படத்தில் ஸ்ருதிஹாசன் மற்றும் சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

படம் குறித்த தகவல்:

அதேபோல் இந்த படத்தில் கன்னட நடிகர் உபேந்திரா, கன்னட நடிகை ரச்சிதா ராம், தெலுங்கு சூப்பர் ஸ்டார் நாகர்ஜுனா, மலையாள நடிகர் சௌபின் சாகிர், ஆமீர் கான் உட்பட பலர் நடிக்கிறார்கள். சமீபத்தில் தான் இந்த படத்தினுடைய படப்பிடிப்பு முடிவடைந்தது. இந்த படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி திரைக்கு வர இருப்பதாக கூறப்படுகிறது. மேலும், இந்த படத்தினுடைய இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா கடந்த வாரம் சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் அமீர்கான், நாகர்ஜுனா, சௌபின் சாகிர் உட்பட கூலி படத்தின் பிரபலங்கள் பலர் கலந்து இருந்தார்கள்.

அனிருத் பேட்டி:

இதில் ரஜினி பேசியிருந்த விஷயங்கள் எல்லாம் இணையத்தில் படு வைரல் ஆகி வருகிறது. அதன் பின் கூலி படம் ஒரு சயின்ஸ் பிக்சன் படம், டைம் ட்ராவல் மையப்படுத்திய கதை என்றெல்லாம் சோசியல் மீடியாவில் செய்திகள் வந்த வண்ணம் இருக்கிறது. தற்போது இந்த படத்திற்கான ப்ரோமோஷன் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கூலிப்படம் தொடர்பாக சமீபத்தில் அளித்த பேட்டியில் அனிருத் சொன்ன கருத்து தான் தற்போது வைரலாக்கப்பட்டு வருகிறது. அதில் அனிருத், அனைவருக்குமே சிந்தனை தடைப்படுவது இயல்பான ஒன்றுதான்.

View this post on Instagram

A post shared by DailyThanthi (@dailythanthinews)

கேரியர் பற்றி சொன்னது:

இப்போது இருக்கும் காலகட்டத்தில் அது ஏற்படுவது ஒரு முக்கியமான விஷயமாக இருக்கிறது. ஒருநாள் ஒரு பாடலில் இரண்டு வரிகளுக்கு எனக்கு யோசனை வராமல் இருந்தது. அப்போது நான் ஷாட் ஜிபிடி உதவி மூலம் இந்த பாடல்கள் வரிகளை அப்லோட் செய்து அதனிடம் ஐடியா கேட்டேன். அதுவும் சில பரிந்துரைகளை கொடுத்தது. அதிலிருந்து ஒன்றை எடுத்து வைத்து நான் என்னுடைய வேலையை பார்த்தேன். அனைவருக்கும் இந்த மாதிரியான சூழல் வரும். அதிலிருந்து விடுபடுவது இப்போது சுலபமாகிவிட்டது. நாம் ஒரு கிரியேட்டிவ் நபராக இருப்பதினால் தான் கிரியேட்டராக இருக்கிறோம். என்று கூறியிருக்கிறார்.

behindtalkies AMP · Quick view
View full