இப்படிப்பட்ட பொண்ணு தான் என் மகனுக்கு வேண்டும் - நிகழ்ச்சியில் அனிருத் அம்மா சொன்னது

By subhashini · 2/3/2025

இசையமைப்பாளர் அனிருத்தின் திருமணம் குறித்து அவருடைய தாயார் கூறியிருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் அனிருத். இவர் இசையமைப்பாளர் மட்டுமில்லாமல் பாடகரும் ஆவார். இவர் ரஜினிகாந்தின் உறவினார் ஆவார். அதோடு இவரின் தந்தை ரவி ராகவேந்திரர் பிரபல நடிகர் ஆவார். மேலும், தனுஷ் நடிப்பில் வெளியாகியிருந்த மூன்று படத்தின் மூலம் தான் அனிருத் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். முதல் படத்திலே இவரின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது.

அதனை தொடர்ந்து இவர் ரஜினி, கமல், விஜய், அஜித், சிவகார்த்திகேயன்,தனுஷ், சூர்யா என பல டாப் நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இவர் இசையில் வெளிவந்த பாடல்கள் எல்லாமே சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது. தற்போது அனிருத் அவர்கள் விஜய்யின் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் வினோத் என்பவர் இயக்குகிறார். இதை அடுத்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் கூலி என்ற படத்திலும் அனிருத் தான் இசையமைத்திருக்கிறார்.

அனிருத் திரைப்பயணம்:

இதற்கு முன்பு ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர், வேட்டையன் படங்களில் அனிருத் தான் இசையமைத்திருந்தார். அந்த பாடல்கள் எல்லாம் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்து இருந்தது. பின் கமலின் இந்தியன் 3, இது தவிர தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் அனிருத் பணியாற்றி வருகிறார்.
இப்படி இருக்கும் நிலையில் அனிருத் திருமணம் குறித்து அவருடைய தாயார் அளித்திருக்கும் கூறி இருக்கும் விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அனிருத் குறித்த தகவல்:

அனிருத்திற்கு தற்போது 34 வயதாகிறது. இருந்தும் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஆனால், இவர் நடிகை ஆண்ட்ரியாவுடன் காதலிலிருந்தது அனைவரும் அறிந்ததே. பின் இவர்கள் இருவரும் பிரேக் அப் செய்து விட்டார்கள் என்று கூறப்பட்டது. அதற்குப்பின் அனிருத் குறித்து எந்த ஒரு காதல் கிசுகிசுக்கள் வரவே இல்லை. இருந்தாலுமே அனிருத் திருமணம் செய்து கொள்ளாமல் தன்னுடைய இசையில் தான் கவனம் செலுத்தி வருகிறார்.

அனிருத் அம்மா பேட்டி:

இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் அனிருத்தின் அம்மா லட்சுமி ரவீந்திரன், அனிருத் திருமணம் கடவுள் அருளால் எவ்வளவு சீக்கிரம் நடக்கிறதோ அவ்வளவு சீக்கிரம் நடந்தால் நன்றாக இருக்கும். அவரின் மனதை புரிந்து கொள்ளும்படியான ஒரு பெண் வேண்டும். அவனுடைய டைமிங்கை புரிந்து கொள்ள வேண்டும். கிரியேட்டிவிட்டி ஃபீல்டில் இருப்பவர்களுக்கு மன நிம்மதி ரொம்ப ரொம்ப முக்கியம்.

அனிருத் குறித்து சொன்னது:

சொல்லப்போனால் நான் இன்றும் அவனை ஒரு குழந்தையாக தான் பொத்தி பொத்தி வளர்த்து வருகிறேன். அவன் மனது கஷ்டப்படுகிற மாதிரி எந்த ஒரு சொல்லும் சொல்ல மாட்டேன். அனிருத் ஸ்டுடியோவை நான் தான் கவனித்து வருகிறேன். அவனுடைய செடுயூலை பார்த்துக்கொள்கிறேன். அவனுடைய வேலை பார்த்தாலும் ஒரு லைனை நான் கிராஸ் பண்ண கூடாது என்று நினைப்பேன். அவனுக்கு சீக்கிரம் ஒரு பெண் கிடைக்க வேண்டும். அதுதான் எங்களுடைய விருப்பம் என்று கூறியிருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full