ரஜினி- கமல் படத்திற்கு இசையமைப்பது எனக்கு மன அழுத்தம்? நிகழ்ச்சியில் அனிருத் ஓபன் டாக்

By subhashini · 23/2/2026

தமிழ்நாட்டுக்கான அடுத்த பெருமுழக்கம் வலிமைமிக்க குரல்கள் வெளிப்படும் சிந்தனைகள் என்ற தலைப்பில் டவுன்ஹால் என்ற நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது. இந்த நிகழ்வில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, தகவல் தொழில்நுட்ப அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் ராஜன், தொழில்கள், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வணிகத்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள், தொழில் துறை சார்ந்த வல்லுநர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு இருந்தார்கள்.

https://www.youtube.com/watch?v=Bu8YfmBtc0Y

அப்போது விழாவில் பேசிய அனிருத், இந்த நிகழ்ச்சிக்கு அழைத்ததற்கு நன்றி. நாங்கள் எங்கள் குழுவுடன் சந்தோஷமாக இசையமைத்து வருகிறோம். ரஜினி- கமல் இணையும் படத்திற்கு இசையமைப்பது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. தமிழ் படத்திற்கு இசையமைப்பது போல தான் மற்ற மொழி படங்களுக்கும் நான் இசையமைத்து வருகிறேன். கடந்த 10 ஆண்டுகள் இந்த இசை உலகின் பொற்காலமாக இருந்து வருகிறது. இப்போது சமூக வலைத்தளங்கள் மூலம் மக்கள் அனைவரிடமும் இசையை கொண்டு சேர்க்கிறது.

அனிருத் பேட்டி:

பின்னணி இசை வாசிப்பாளராக இருந்து இன்று பலபேர் இசையமைப்பாளராக மாறி இருக்கிறார்கள். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் எனக்கு முன் வந்தவர். தற்போது இசையமைப்பாளர்களிடையே எந்த போட்டியும் கிடையாது. வேட்டையின் படத்தில் மலேசியா வாசுதேவன் சார் குரலை ஏஐ மூலமாக பாடி இருந்தது. அவருடைய மகன் இடம் அதற்கான அனுமதியும் வாங்கினோம். ஏஐ தொழில்நுட்பம் பிரச்சினையை ஏற்படுத்துமா என்றால் ஒரு குரலை காட்டி அதுபோல பாட சொன்னால் ஏஐ பாடும்.

https://www.youtube.com/watch?v=LdiuIy9R5cs

ஏஐ பற்றி சொன்னது:

அதே படத்தின் கதைக்களத்தை உணர்ந்து இசையமைப்பாளர்கள் தான் இசையமைக்கிறார்கள். இப்போது ஏஐ எந்த பிரச்சனையும் இல்லை. ரஜினி, கமல், விஜய் படங்களுக்கெல்லாம் இசையமைக்கும் போது எனக்கு எந்த ஒரு அழுத்தமும் கிடையாது. இயக்குனர் நெல்சனும் நானும் ரஜினி- கமல் இணையும் படத்தின் ப்ரோமோவிற்கு இசையமைத்தோம். ரஜினி கமல் இருவருமே அதை பார்த்து பாராட்டி இருந்தார்கள்
என்று கூறியிருக்கிறார்.

அனிருத் திரைப்பயணம்:

தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் அனிரூத். இவர் இசையமைப்பாளர் மட்டுமில்லாமல் பாடகரும் ஆவார். இவர் ரஜினிகாந்தின் உறவினார் ஆவார். தனுஷ் நடிப்பில் வெளியாகியிருந்த மூன்று படத்தின் மூலம் தான் அனிருத் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். முதல் படத்திலே இவரின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து இவர் ரஜினி, கமல், விஜய், அஜித், சிவகார்த்திகேயன், தனுஷ், சூர்யா என டாப் நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இவர் இசையில் வெளிவந்த பாடல்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full