பொண்ணு இவர் தான், திருமண தேதி - கூலாக இசையமைப்பாளர் அனிருத் போட்ட ட்விட் - என்ன தெரியுமா?

By subhashini · 14/6/2025

தன்னுடைய திருமணம் தொடர்பான சர்ச்சைகளுக்கு இசையமைப்பாளர் அனிரூத் போட்டு இருக்கும் பதிவு தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தென்னிந்திய சினிமா உலகில் மிகப் பிரபலமான இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருப்பவர் அனிரூத். இவர் இசையமைப்பாளர் மட்டுமில்லாமல் பாடகரும் ஆவார். இவர் ரஜினிகாந்தின் உறவினார் ஆவார். இவரின் தந்தை ரவி ராகவேந்திரர் பிரபல நடிகர் ஆவார்.

மேலும், தனுஷ் நடிப்பில் வெளியாகியிருந்த மூன்று படத்தின் மூலம் தான் அனிருத் தமிழ் சினிமா உலகில் அறிமுகமாகி இருந்தார். முதல் படத்திலே இவரின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து இவர் ரஜினி, கமல், விஜய், அஜித், சிவகார்த்திகேயன்,தனுஷ், சூர்யா என பல டாப் நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்திருக்கிறார். இவர் இசையில் வெளிவந்த பாடல்கள் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்திருக்கிறது.

அனிருத் திரைப்பயணம்:

தற்போது அனிருத் அவர்கள் விஜய்யின் நடிப்பில் உருவாகி வரும் ஜனநாயகன் என்ற படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்த படத்தை இயக்குனர் வினோத் என்பவர் இயக்குகிறார். இதை அடுத்து ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி இருக்கும் கூலி என்ற படத்திலும் அனிருத் தான் இசையமைத்திருக்கிறார்.
இதற்கு முன்பு ரஜினி நடிப்பில் வெளிவந்த ஜெயிலர், வேட்டையன் படங்களில் அனிருத் தான் இசையமைத்திருந்தார்.

அனிரூத் காதல்:

அந்த பாடல்கள் எல்லாம் மிகப்பெரிய அளவில் ஹிட் கொடுத்து இருந்தது. பின் கமலின் இந்தியன் 3, சிவகார்த்திகேயனின் மதராஸி, இது தவிர தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் அனிருத் பணியாற்றி வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் அனிருத் திருமணம் குறித்த விஷயம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அனிருத்திற்கு தற்போது 34 வயதாகிறது. இருந்தும் இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.

https://www.youtube.com/watch?v=YRXeRegJkQE

அனிரூத் திருமணம்:

அதோடு இவர் நடிகை ஆண்ட்ரியாவுடன் காதலிலிருந்தது அனைவரும் அறிந்ததே. பின் இவர்கள் இருவரும் பிரேக் அப் செய்து விட்டார்கள் என்று கூறப்பட்டது. அதற்குப்பின் அனிருத் குறித்து காதல் கிசுகிசுக்கள் வந்து கொண்டே இருக்கிறது. இருந்தாலுமே அனிருத் திருமணம் செய்து கொள்ளாமல் தன்னுடைய இசையில் தான் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் சன் பிக்சர்ஸ் மற்றும் சன்நெட்வெர்க்கின் தலைவர் கலாநிதிமாறனின் மகள் காவியா மாறானை தான் அனிருத் திருமணம் செய்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

அனிரூத் டீவ்ட்:

இருவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் எல்லாம் இணையத்தில் வெளியானது தொடர்ந்து இவர்கள் திருமணம் உறுதியாக விட்டதாக கூறப்பட்டது. அதோடு சீக்கிரமாகவே திருமணம் என்றெல்லாம் கூறினார்கள். இந்நிலையில் இது தொடர்பாக அனிருத், டீவ்ட்டர் பக்கத்தில் பதிவு ஒன்று போட்டு இருக்கிறார். அதில் அவர், திருமணமா? வதந்திகளை பரப்புவதை நிறுத்துங்கள் என்று சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full