பிரபல நடிகையுடன் அனிருத் காதல் ? விரைவில் திருமணமா ? என்னங்க சொல்றீங்க ?

By Rajkumar · 27/5/2022

இசையமைப்பாளர் அனிருத் அவர்கள் முன்னணி நடிகையை திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது. தமிழ் சினிமாவில் இசையில் ராக் ஸ்டாராக வலம் வந்து கொண்டிருப்பவர் அனிருத் ரவிச்சந்திரன். தன்னுடைய இளம் வயதிலேயே இசையின் மூலம் ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தவர். இவர் இசையமைப்பாளர், பின்னணி பாடகர் என பன்முகங்களை கொண்டு திகழ்கிறார். ஆரம்பத்தில் இவர் பல கச்சேரிகளில் பாடி இருக்கிறார்.

பின் 2011 ஆம் ஆண்டு தனுஷ் நடிப்பில் வெளிவந்து சூப்பர் ஹிட் கொடுத்த 3 படத்தின் மூலம் தான் அனிரூத் சினிமாவுலகில் இசையமைப்பாளராக அறிமுகமானார். அதுவும் ‘ஒய் திஸ் கொலவெறி’ என்ற பாடலின் மூலம் இவர் உலக அளவில் பிரபலம் ஆனார். அதனை தொடர்ந்து இவர் அஜித், விஜய், கமல், ரஜினி பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். மேலும், இவரது மெலோடி பாடல்கள், குத்து பாடல்கள் எது என்றாலும் ரசிகர்கள் மத்தியில் சும்மா கிழி தான்.

அனிரூத் திரைப்பயணம்:

அதோடு சமீபத்தில் வெளியாகி இருந்த சிவகார்த்திகேயனின் டாக்டர், டான் படத்தில் அனிரூத் உடைய பாடல்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. அதனைத் தொடர்ந்து அவர் அயலான் போன்ற படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். அதேபோல் விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி இருந்த பீஸ்ட் படத்திலும் அனிரூத் இசை அமைத்து இருந்தார். பீஸ்ட் படத்தை இயக்குனர் நெல்சன் இயக்கி இருந்தார்.

பீஸ்ட் படம்:

சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து இருந்தது. மேலும், இந்த படத்தில் செல்வராகவன், பூஜா ஹெக்டே, விடிவி கணேஷ் உட்பட பல நடிகர்கள் நடித்து இருந்தார்கள். படம் பெரிய அளவில் வெற்றி அடையவில்லை என்றாலும் படத்தின் பாடல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருந்தது. அதிலும் படத்தில் நெல்சன்- அனிருத்- சிவகார்த்திகேயன் கூட்டணியில் உருவாகி இருந்த அரபிக் குத்து பாடல் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு இருந்தது.

அனிரூத் இசைப்பயணம்:

தற்போது அனிருத் அவர்கள் டாக்டர், சியான் 60, இந்தியன் 2, விக்ரம், திருச்சிற்றம்பலம், தலைவர் 169 உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசை அமைத்து வருகிறார். மேலும், இவர் இசையமைப்பது அமைத்து இல்லாமல் பாடல் பாடுவது, இசை ஆல்பங்களில் நடிப்பது, விளம்பர படங்களில் நடிப்பது என பல வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். இந்த நிலையில் அனிருத் முன்னணி நடிகையை திருமணம் செய்து கொள்கிறார் என்ற தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகிறது.

அனிரூத் திருமணம் செய்யும் பெண்:

அது என்னவென்றால், அனிரூத் அவர்கள் நடிகை கீர்த்தி சுரேஷை தான் திருமணம் செய்கிறார் என்று பல வதந்திகள் சோஷியல் மீடியாவில் வந்த வண்ணம் இருந்தது. ஆனால், இது உண்மையில்லை என்று தற்போது அறிவித்து இருக்கிறார்கள். மேலும், அனிருத்துக்கு திருமண ஏற்பாடு வேலை நடந்து வருவது உண்மை தான். அந்த மணப்பெண் திரைத் துறையைச் சேர்ந்தவர் இல்லை. விரைவில் இதுகுறித்து அனிருத் அதிகாரபூர்வமாக கூறுவார் என்று நண்பர்கள் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full