அனிருதா ஸ்ரீகாந்த்தின் முதல் மனைவி துல்கர் சல்மானுக்கு ஜோடியா? அதிருப்தியில் ரசிகர்கள்
தமிழ் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சம்யுக்தா. இவர் படிக்கும்போதே மாடலிங்கில் அதிக கவனம் செலுத்தி வந்தார். பின் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் தான் மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தார். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு முன் இவர் ராதிகா நடிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகியிருந்த சந்திரகுமாரி என்ற சீரியலில் நடித்திருந்தார். அதற்கு பிறகு தான் இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அதற்குப்பின் இவருக்கு பட வாய்ப்புகள் வந்தது. தற்போது இவர் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இதற்கிடையில் சம்யுக்தா தன்னுடைய பெற்றோர்கள் விருப்பப்படி கார்த்திக் சங்கர் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர் ஒரு தொழில் அதிபர். இவர்களுக்கு ஒரு மகன் இருக்கிறார். சில வருடங்களுக்கு முன் இவர் தன்னுடைய கணவரை விவாகரத்து செய்வதாக அறிவித்து இருந்தார். அதற்கு காரணம், கொரோனா காலகட்டத்தில் சம்யுக்தா கணவர் துபாயில் வேறொரு பெண் உடன் 4 வருடம் தொடர்பில் இருந்தார். அதனால் தான் இருவரும் பிரிந்து விட்டார்கள். சமீபத்தில் தான் இவர்கள் இருவருக்குமே பரஸ்பரமாக விவாகரத்து கிடைத்து.
சம்யுக்தா குறித்த தகவல்:
பின் நடிகை சம்யுக்தாவிற்கு இரண்டாவது திருமணம் நடப்பதாக கூறப்பட்டது. அதாவது நடிகை சம்யுக்தா அவர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரும், கிரிக்கெட் வர்ணனையாளருமான அனிருதா ஸ்ரீகாந்த்தை தான் திருமணம் செய்ய இருப்பதாக சோசியல் மீடியாவில் நிறைய செய்திகள் வந்தது.
கிரிக்கெட் ஜாம்பவான் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்தின் மகன் தான் அனிருதா.சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக சில சீசன்கள் இவர் விளையாடியிருக்கிறார். இப்போது கிரிக்கெட் வர்ணனையாளராக இருக்கிறார்.
சம்யுக்தா திருமணம்:
மேலும், நேற்று சம்யுக்தா- அனிருதா ஸ்ரீகாந்தின் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் நெருங்கிய நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டு இருந்தார்கள். அதோடு அனிருதா ஸ்ரீகாந்த் ஏற்கனவே திருமணம் ஆனவர் தான். கடந்த 2012 ஆம் ஆண்டு தான் இவருக்கு ஆர்த்தி வெங்கடேஷ் என்பவருடன் திருமணம் நடந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு தான் இவர்களுமே விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி இருக்கும் நிலையில் அனிருதா ஸ்ரீகாந்தின் முதல் மனைவி குறித்த தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஆர்த்தி குறித்த தகவல்:
இவர்கள் இருவருமே இரண்டு ஆண்டுகள் தான் வாழ்ந்தார்கள். 2014 ஆம் ஆண்டு இருவரும் பரஸ்பரமாக விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். ஆர்த்தி பேஷன் மற்றும் பொழுதுபோக்கு துறையில் ரொம்பவே ஆக்டிங் ஆக இருக்கும் நபர். இவரை இன்ஸ்டாகிராமில் 5 லட்சத்துக்கும் அதிகமானோர் பாலோ செய்கிறார்கள். இவர் பேசன் துறையில் வெற்றிகரமாக இருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவர் 2017 ஆம் ஆண்டு சோலோ என்ற படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்திருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.