சினிமா மற்றும் தொலைக்காட்சி துறையில் பிரபலமாவது அவ்வளவு எளிதான விஷயம் அல்ல. அவ்வப்போது ஒருசிலர் இணையத்தில் திடீர் ட்ரெண்ட் ஆவதுண்டு. அப்படி ஒருவர் தான் சன் தொலைங்கட்சியில் செய்தி வாசிப்பாளராக இருக்கும் அனிதா. பிரியா பவானி ஷங்கர் வரிசையில் ஒரு செய்தியாளருக்கு அதிக ரசிகர்கள் உருவாகினார்கள் என்றால் அது அனிதா சம்பத்திற்கு தான்.

இதையும் பாருங்க : கடினமாகிவரும் பினாலே டாஸ்க்.! காயமடைந்த லாஸ்லியா.!

ரசிகர்கள் மத்தியில் இவருக்கு கிடைத்த பிரபலத்தை வைத்து இவருக்கு சினிமாவிலும் வாய்ப்பு கிடைத்து. கடந்த ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அனிதா சம்பத். அதன் பின்னர் ஒரு சில படங்களில் செய்தி வாசிப்பாளராக நடித்திருந்தார். தற்போது சூர்யா நடிப்பில் கே வி ஆனந்த் இயக்கி வரும் காப்பான் படத்தில் நடித்து வருகிறார்.

Advertisement

இந்த நிலையில் இவருக்குகடந்த மாதம் திருமணம் முடிந்துள்ளது. ரசிகர்கள் யாரும் எதிர்பாராத விதத்தில் இவரது திருமணம் திடீரென்று நடைபெற்றுள்ளது. தனது திருமண புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார் அனிதா சம்பத். இந்த புகைப்படங்கள் ரசிகர்களுக்கு மேலும் ஷாக்கை ஏற்படுத்தி இருந்தது. திருமணத்திற்கு பின்னர் மீண்டும் செய்திவாசிப்பாளராக பணியாற்ற துவங்கியுள்ளார் அனிதா சம்பத்.

சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில் தனது புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, திருமணத்திற்கு பிறகு சன் டிவியில் முதல் முறை செய்தி வாசித்தேன் என்று குறிப்பிட்டிருந்த இதனை கண்ட ரசிகர் ஒருவர், தாலி எங்கே என்று கேள்வி கேட்க பலரும் அனிதா சம்பத்தை ட்ரோல் செய்ய துவங்கிவிட்டனர். ஆனால், இதற்கு பதில் அளித்துள்ள அனிதா சம்பத், என்று பதிவிட்டுள்ளார்.

Advertisement

பிக் பாஸ் நிகழ்ச்சியில் உங்களுக்கு பிடித்தமான போட்டியாளர்களை காப்பாற்ற நீங்கள் ஓட்டிங் சிஸ்டம் மூலம் வாக்களிலாம் அல்லது மிஸ்டு கால் மூலம் வாக்களிக்கலாம். நீங்கள் வாக்களிக்க ‘ BIGG BOSS TAMIL VOTE‘ இந்த லிங்கை கிளிக் செய்யவும்.

Advertisement
Advertisement