சாராயம் குடித்தவர்களை சந்தித்த விஜயை நான் விமர்சித்தேனா? அனிதா சம்பத் விளக்கம்
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் குடித்து 40க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கும் சம்பவம் தான் ஒட்டுமொத்த தமிழகத்தையே புரட்டி போட்டு இருக்கிறது. சில பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதுமட்டுமில்லாமல் பல பேர் வாந்தி, மயக்கம், தலைவலி, வயிறு எரிச்சலால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருந்தாலுமே, மருத்துவர்கள் பல பேர் இறக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இதை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு இருக்கிறார்கள்.
அதில் மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்ததால் தான் இந்த உயிரிழப்பிற்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரிந்திருக்கிறது. மேலும், காவல்துறை பொறுப்பு இல்லாமல் இருந்ததால் இந்த சம்பவம் நிகழ்ந்து இருக்கிறது. இதனால் பத்துக்கு மேற்பட்ட காவல்துறை அதிகாரிகளை அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்களை உடனடியாக கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் உத்தரவு போட்டிருக்கிறார்.
கள்ளக்குறிச்சி சம்பவம்:
பின் இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார். இது தொடர்பாக விசாரணை நடத்த தனிக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது. கள்ளக்குறிச்சி விவகாரம் தொடர்பாக பிரபலங்கள், எதிர்க்கட்சி தலைவர்கள் என பலரும் திமுக அரசை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் அவர்கள் தமிழக அரசை கண்டித்தும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஆறுதல் கூறும் வகையில் பதிவு ஒன்று போட்டிருக்கிறார்.
விஜய் பதிவு:
அதில் அவர், கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச் சாராயம் அருந்திய 25க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி மிகுந்த அதிர்சியையும், மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைவில் முழு உடல்நலம் பெற இறைவனைப் பிரார்த்திக்கின்றேன். கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது.
அனிதா பதிவு:
இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம் இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறி இருக்கிறார். இதை தொடர்ந்து இன்று மாலை நடிகர் விஜய் அவர்கள் கள்ளச்சாராயத்தால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்து பாதிக்கப்பட்டவர்கள் உடைய உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவித்திருக்கிறார். பின் இது தொடர்பாக நடிகையும், செய்தி வாசிப்பார் அனிதா சம்பத் பதிவு ஒன்று போட்டிருக்கிறார். அதில் அவர், நாட்டுக்காக போராட பார்டருக்கு போனப்ப தீவிரவாதிகளிடம் நேருக்கு நேர் தாக்கும் போது நெஞ்சில குண்டு பட்டு ஹாஸ்பிடல்ல கவலைக்கிடமா இருக்காங்க, பாவம் என்று கிண்டல் செய்து இருக்கிறார்.
அனிதா விளக்கம்:
இதற்கு விஜய் ரசிகர்கள் பலருமே கண்டனம் தெரிவித்தார்கள். இந்நிலையில் இது தொடர்பாக அனிதா சம்பத், என்னோட கமெண்ட் விஜய் பற்றியது இல்லவே இல்லை. அவர நான் தப்பா எங்கேயுமே மென்ஷன் பண்ணவில்லை. அவரை அரசியலுக்கு வருவதை நினைத்து நான் ரொம்ப சந்தோஷப்படுகிறேன். மனைவி, குழந்தைகளை கவனிக்காமல் ரொம்ப ஏழ்மையான சூழ்நிலையில் இருந்தும், காசு கொண்டு போய் கள்ள சாராயம் குடித்து ஹாஸ்பிடல்லில் அட்மிட் ஆகி இருக்காங்க. அவங்களை மீடியா தியாகி மாறி காட்டியிருக்கும் மீடியாவை தான் மென்ஷன் பண்ணேன். விஜய் போய் சந்திப்பதற்காக நான் சொல்லவில்லை. உலகத்தில் எத்தனையோ பேரு 5,10 ன்னு சேர்த்து வைத்து பிள்ளைகளை படிக்க வைக்கிறாங்க. அப்படிப்பட்ட அப்பாக்கள் இருக்கிற நம்ம ஊரில் இப்படி ஊதாரி தனமா சுத்திட்டு இருப்பதை பார்க்கும் போது ஆதங்கமா தான் இருக்கு. இறந்தவங்க பாவம் என்று சொல்வதை விட அவங்க மனைவி, குழந்தைகள் தான் பாவம். அவர்களுக்கு கடவுள் தான் தைரியத்தை கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.