என் ஆசை நிறைவேறி விட்டது , சந்தோஷத்தில் அனிதா சம்பத் சொன்ன குட்நியூஸ் - குவியும் வாழ்த்துக்கள்
சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் அறிமுகமாகி பிரபலமான நடிகையாக இருப்பவர் அனிதா சம்பத். இவர் விஜய் நடிப்பில் வெளியான சர்க்கார் படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் அனிதா. அதன் பின்னர் இவர் சூர்யா நடிப்பில் கே.வி ஆனந்த் இயக்கத்தில் வெளியான காப்பான், ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் போன்ற படத்திலும் நடித்திருந்தார். இதன் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
அதன் பின் அனிதா சம்பத் அவர்கள் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி இருந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். ஆனால், இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓரிரு நாட்களிலேயே ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை பெற்றார். இதனால் சீக்கிரமாகவே அனிதா நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பிறகு அனிதாவிற்கு நிறைய வாய்ப்புகள் வந்தது.
அனிதா குறித்த தகவல்:
தற்போது அனிதா நிறைய விளம்பரம், படங்களில் நடித்து கொண்டு வருகிறார். மேலும், இவர் தனியாக யூடுயூப் சேனல் ஒன்று ஆரம்பித்து தன் கணவருடன் சேர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். தற்போது, அனிதா சம்பத் கலைஞர் டிவியில் இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகும் பவித்ரா சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த சீரியலில் அனிதா, பாடல் ஆசிரியர் சினேகன் மற்றும் நடிகை கீதா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
அனிதா நடிக்கும் சீரியல்:
கடந்த நவம்பர் 4 ஆம் தேதி இருந்து ஒளிபரப்பாகும் இந்த சீரியல் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இப்படி இருக்கும் நிலையில் அனிதா சம்பத் சொல்லி இருக்கும் குட் நியூஸ் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது கடந்த 2022 ஆம் ஆண்டு இவர் தங்களின் புது வீடு கிரகப்பிரவேசம் செய்து இருந்த வீடியோவை பதிவிட்டு இருந்தார். அதில் அனிதா, என் “housing board anitha” to “house owner Anitha Sampath” பயணம் அவ்வளவு எளிதானது இல்ல.
அனிதா வீடு:
இவ்வளவு இளமைக்காலத்துல சொந்த வீடு வாங்குனது எங்க ரெண்டு பேரு குடும்பத்திலயும் இதுதான் முதல்முறை என்று கூறி இருந்தார். இதற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள். இதைத்தொடர்ந்து தற்போது அனிதா சம்பத் இன்னொரு வீட்டை வாங்கி இருக்கிறார். சின்ன வயதிலிருந்தே அனிதா சம்பத் தன்னுடைய அம்மாவிற்கு சொந்த வீடு ஒன்றை வாங்கி தர வேண்டும் என்று ஆசைப்பட்டார். தற்போது அந்த கனவு இப்போது நிறைவேறி இருக்கிறது.
அனிதா சொன்ன குட் நியூஸ்:
தன்னுடைய அம்மாவுக்காக தான் இவர் சென்னையில் புதிய வீடு ஒன்றை வாங்கி இருக்கிறார். இந்த வீட்டின் கிரகப்பிரவேசம் புகைப்படங்களை தான் இவர் சோசியல் மீடியாவில் பகிர்ந்து இருக்கிறார். பலரும் அனிதா சம்பத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் சமீபத்தில் தான் இவர் புது கார் ஒன்றையும் வாங்கியிருந்தார்