கோவில் குளப்படிக்கட்டுக்கு 11 லட்சமா? அனிதா சம்பத் பதிவிட்ட போஸ்ட்- வறுத்து எடுக்கும் நெட்டிசன்கள்

By Ajju · 1/8/2024

கோவில் குளத்தின் படிக்கட்டு மேம்பாடு பணிக்காக செலவு செய்தது குறித்து நடிகை அனிதா சம்பத் போட்டிருக்கும் வீடியோ தான் தற்போது இணையத்தில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. சன் டிவியில் செய்தி வாசிப்பாளராக மக்கள் மத்தியில் அறிமுகமாகி பிரபலமான நடிகையாக இருப்பவர் அனிதா சம்பத். இவர் எப்போதும் சோசியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக இருக்கிறார். அதில் அவர், தான் அடிக்கடி எடுக்கும் புகைப்படம், வீடியோக்களை எல்லாம் சோசியல் மீடியாவில் பகிர்ந்து வருகிறார்.

இதனாலே இவரை எக்கச்சக்கமான ரசிகர்கள் பாலோ செய்கிறார்கள். சமீபத்தில் கூட நடிகை அனிதா சம்பத் அவர்கள் ஆன்லைனில் ஒரு பொருளை ஆர்டர் செய்திருந்தார். அந்த பார்சலைப் பிரித்து பார்த்த உடனே இவருக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியிருக்கிறது. காரணம், இவர் அழகான புடவை ஒன்றை ஆர்டர் செய்திருந்தார். ஆனால், இவருக்கு வந்தது பழைய ரேஷன் புடவை மாதிரி மோசமாக இருக்கும் அழுக்கு சேலையை போல அந்த புடவை இருந்திருக்கிறது.

அனிதா சம்பத் பதிவு:

இதை தான் அனிதா சம்பத் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு தன்னுடைய ஆதங்கத்தை வெளியிட்டு இருந்தார்.
அந்த வகையில் தற்போது அனிதா சம்பத் மீண்டும் பதிவிட்டு இருக்கும் வீடியோ தான் இணையத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது, காஞ்சிபுரம் மாவட்டத்தை சார்ந்த மாங்காடு பக்கத்தில் உள்ள கொழுமணிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட குளத்திற்கு நடைபாதை படிக்கட்டு போட்டு இருக்கிறார்கள். இந்த மேம்பாட்டு பணிக்காக 11.36 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டதாக அங்கு உள்ள ஒரு சுவற்றில் எழுதப்பட்டிருக்கிறது.

https://youtube.com/shorts/mu6HdYoifYE?si=mw6zvkQpQArdiuT-

நெட்டிசன்கள் கருத்து:

இதை தான் அனிதா சம்பத் குறிப்பிட்டு, இந்த படிக்கட்டுகளை கட்டுவதற்காக 11 லட்சமா? 12 லட்சத்தில் முழு வீடே கட்டலாமே என்று கேள்வி எழுப்பி இருக்கிறார். இதை பார்த்த நெட்டிசன்கள், இப்படித்தான் என்க ஊரில் சின்டெக்ஸ் டேங்க் மட்டும் வைத்துவிட்டு லட்சக்கணக்கை எழுதி விடுகிறார்கள் என்று கூறியிருக்கிறார்கள். அதோடு சிலர் அனிதாவின் துணிச்சலை பாராட்டியும் அவருக்கு ஆதரவு தெரிவித்தும் வருகிறார்கள். இன்னும் சிலர் அனிதாவை விமர்சித்து வருகிறார்கள்.

அனிதா சம்பத் குறித்த தகவல்:

மேலும், இவர் சூர்யா நடிப்பில் கே.வி ஆனந்த் இயக்கத்தில் வெளியான காப்பான், ரஜினி நடிப்பில் வெளியான தர்பார் போன்ற படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். இதன் மூலம் இவருக்கு என்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. அந்த பிரபலத்தினால் அனிதா சம்பத் அவர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருந்தார். ஆனால், பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஓரிரு நாட்களிலேயே இவர் ரசிகர்கள் மத்தியில் வெறுப்பை பெற்றார்.

அனிதா சம்பத் திரைப்பயணம்:

இதனால் சீக்கிரமாகவே அனிதா நிகழ்ச்சியை விட்டு வெளியேறி இருந்தார். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளிவந்த பிறகு அனிதாவிற்கு நிறைய பட வாய்ப்புகள் வந்தது. தற்போது அனிதா நிறைய விளம்பரம், படங்களில் நடித்து கொண்டு வருகிறார். மேலும், இவர் தனியாக யூடுயூப் சேனல் ஒன்று ஆரம்பித்து தன் கணவருடன் சேர்ந்து வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். தற்போது அனிதா அவர்கள் பவித்ரா என்ற புது தொடரில் கமிட்டாகி இருக்கிறார். இதில் சினேகன் நடிக்கிறார்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full