அனிதா விஜயகுமாரின் வீட்டில் மீண்டும் விசேஷம் , என்ன தெரியுமா? குவியும் வாழ்த்துக்கள்

By subhashini · 25/4/2026

தமிழ் சினிமா உலகில் மிக பிரபலமான நடிகராக திகழ்பவர் விஜயகுமார். இவர் தமிழ் மொழியில் மட்டும் இல்லாமல் தெலுங்கு, மலையாளம், இந்தி என பிற மொழி படங்களில் நடித்து இருக்கிறார். இவர் இதுவரை 400க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து இருக்கிறார். ஆரம்பத்தில் கதாநாயகனாகவும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்த விஜயகுமார் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

மேலும், இவர் வெள்ளித்திரையில் மட்டுமில்லாமல் சின்னத்திரை சீரியல்களிலும் நடித்திருக்கிறார். தற்போது விஜயகுமார் தன்னுடைய குடும்பத்தையும், கேரியரையும் கவனித்து வருகிறார்.இதனிடையே விஜயகுமார் கடந்த 1969 ஆம் ஆண்டு முத்துக்கன்னு என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் 1976ல் நடிகை மஞ்சுளாவை திருமணம் செய்து கொண்டார். விஜயகுமார்- முத்துக்கனுக்கு பிறந்தவர்கள் தான் அருண் விஜய், அனிதா , கவிதா.

விஜயகுமார் குடும்பம்:

விஜயகுமார்-மஞ்சுளாவிற்கு பிறந்தவர்கள் வனிதா, ப்ரீத்தா மற்றும் ஸ்ரீதேவி. ஆனால், அருண் விஜய் அனைவரையும் உடன் பிறந்த சகோதரிகளாக தான் பாவித்து வருகிறார். அதேபோல் இவருடைய மகன் அருண்குமார் தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் ஹீரோவாக மட்டுமில்லாமல் வில்லனாகவும் மிரட்டிக் கொண்டு இருக்கிறார். மேலும், விஜயகுமாரின் மகள்களும் படங்களில் நடித்திருந்தார்கள்.

அனிதா விஜயகுமார் குறித்த தகவல்:

அருண் குமாரின் அக்கா அனிதா குறித்து பலரும் அறிந்திருக்க மாட்டார்கள். இவர் கோகுல் கிருஷ்ணன் என்ற மருத்துவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள். தற்போது தனது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் இந்தியாவில் செட்டில் ஆகி விட்டார். இவரின் மகள் தியா வெளிநாட்டில் மருத்துவம் படித்து முடித்து வேலை செய்கிறார். மேலும், கடந்த 2024 ஆம் ஆண்டு அனிதாவின் மகள் தியா உடைய திருமணம் கோலாகலமாக நடைபெற்றது

https://www.youtube.com/shorts/cSO0R5jsvkM?si=ZD0WfEpstj9UawVR

வளைகாப்பு விழா:

அதனை தொடர்ந்து தியா, தங்களுடைய குடும்ப விழாக்களின் போது எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சுற்றுலா புகைப்படங்கள் அனைத்தையுமே இணையத்தில் பகிர்ந்து வந்தார். இப்படி இருக்கும் நிலையில் சமீபத்தில் தியா, தான் கர்ப்பமாக இருக்கும் செய்தியை சோசியல் மீடியாவில் அறிவித்திருந்தார். பலருமே வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்கள். இப்படி இருக்கும் நிலையில் தியாவிற்கு 5ம் மாதம் வளைகாப்பு வீட்டிலேயே குடும்ப நண்பர்கள் உறுப்பினர்கள் முன்னிலையில் நடத்தி இருக்கிறார்கள்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full