விஜே அஞ்சனா வீட்டில் திடீர் இழப்பு,, கதறி அழுத அஞ்சனா. ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்.

By Arun · 19/7/2022

வி ஜே அஞ்சனா வீட்டில் துக்க சம்பவம் நடந்துள்ள தகவல் தற்போது சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தொலைக்காட்சி நிகழ்ச்சி மூலம் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை சேர்த்து வைத்திருப்பவர் சன் மியூசிக் வி ஜே அஞ்சனா. இவர் பிரபல சன் மியூசிக் தொலைக்காட்சியில் 10 ஆண்டுகளுக்கு மேலாக தொகுப்பாளினியாக இருந்து வந்தவர். சன் ம்யூசிக் என்று சொன்னாலே அனைவருக்கும் நியாபகத்தில் வருவது அஞ்சனா ரங்கன் தான். இவர் தொலைக்காட்சிகளில் வீடியோ ஜாக்கியாக தான் அறிமுகமானர்.

இன்று வரை ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமாக உள்ள தொகுப்பாளினி அஞ்சனா ரங்கன் திகழ்கிறார். இவர் சன் ம்யூசிக் தொலைக்காட்சி ஆரம்பித்த காலத்தில் இருந்து தற்போது வரை பிரபலமான தொகுப்பாளினியாக இருந்து வருகிறார். மேலும், இவர் சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் என எல்லா சேனலிலும் பட புரமோஷன் பேட்டி, சிறப்பு நிகழ்ச்சி, படத்தின் வெற்றி கொண்டாட்ட நிகழ்ச்சி என பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருக்கிறார்.

இதையும் பாருங்க : 'அது ஒரு கெட்ட கனவு' நடிகையை ஏமாற்றிய திரௌபதி இயக்குனர் - நடிகையின் ஒப்புதல் வாக்குமூலம்

அஞ்சனா திருமணம்:

இடையில் இவர் கயல் பட நடிகர் சந்திரன் என்பவரை கடந்த 2016 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். அதோடு இவருக்கு கடந்த 2018 ஆம் ஆண்டு ஒரு அழகான ஆண் குழந்தை கூட பிறந்தது. இதனால் இவர் சில ஆண்டுகள் மீடியாவில் இருந்து பிரேக் எடுத்துக் கொண்டார். தற்போது 10 ஆண்டுகள் கழித்து மீண்டும் தொகுப்பாளினியாக அஞ்சனா கலக்கி வருகிறார். ஜி தமிழில் ஒளிபரப்பாகி வரும் ஜூனியர் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் தொகுப்பாளினியாக பங்குபெற்று வந்தார் அஞ்சனா.

அஞ்சனா ரீ-என்ட்ரி:

சமீபத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா’ பட வெற்றி விழாவில் கூட தொகுப்பாளினியாக இருந்தார் அஞ்சனா. தற்போது இவர் இசை வெளியீட்டு விழா, சினிமா தொடர்பான விழாக்கள் மற்றும் கார்ப்பரேட் நிகழ்ச்சிகள் போன்ற பல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். இது ஒரு பக்கம் இருக்க, இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கிறார். இவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட பாலோவர்ஸ் இருக்கின்றனர்.

அஞ்சனா வீட்டில் துக்க சம்பவம்:

தனக்கு கொரோனா பாஸிட்டிவ் விஷயத்தை கூட இன்ஸ்டாவில் ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டு, அது குறித்து விழிப்புணர்வு போஸ்ட் ஒன்றையும் அஞ்சனா ஷேர் செய்திருந்தார். இது தவிர அவ்வப்போது எடுக்கும் போட்டோஷூட் படங்களையும் அஞ்சனா பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் அஞ்சனா வீட்டில் துக்க சம்பவம் நடந்திருக்கும் தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது, அஞ்சனாவின் மாமனாரும், கயல் சந்திரனின் தந்தையுமான சுப்ரமணியன் உயிரிழந்திருக்கிறார்.

ஆறுதல் சொல்லும் ரசிகர்கள்:

இவருடைய இறுதிச் சடங்கின்போது அஞ்சனா ரோட்டில் நின்று கதறி கதறி அழுது இருக்கிறார். அந்த புகைப்படம், வீடியோக்கள் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆறுதல் மெசேஜ்களை பதிவு செய்து வருகின்றனர். அதுமட்டுமில்லாமல் அஞ்சனாவின் சினிமா நண்பர்கள், ஆங்கர்கள், விஜே ஃபிரண்ட்ஸ் பலரும் அஞ்சனா மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full