'போதும் போதும்' - பேச்சை நிறுத்த சொன்ன பத்திரிகையாளர்கள் - வெளியில் வந்து வாக்குவாதம் செய்த அஞ்சனா.

By Manikandan · 8/10/2023

சித்தா திரைப்படத்தின் வெற்றி விழாவில் வள வளவென பேசிய அஞ்சனா அதன் பின் பத்திரிக்கையளரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டார். சமீப காலமாகவே சித்தார்த் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது சித்தார்த் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் சித்தா. இந்த படத்தை ETAKI ENTERTAINMENT நிறுவனம் தயாரித்து இருக்கிறது. இந்த படத்தில் சித்தார்த்துடன் நிமிஷா சஜயன், அஞ்சலி நாயர், சஹஷ்ரா ஸ்ரீ உட்பட பல நடித்திருக்கிறார்கள். இந்த படத்தை இயக்குனர் அருண்குமார் எழுதி இயக்கி இருக்கிறார். பல எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி இருக்கும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? இல்லையா? என்பதை பார்க்கலாம்.

கதைக்களம்:

படத்தில் சித்தார்த் தன் அண்ணன், அண்ணி, அண்ணன் மகளுடன் சந்தோஷமாக எளிமையான அழகான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார். திடீரென்று ஒரு நாள் சித்தார்த்தின் அண்ணன் இறந்து விடுகிறார். என்ன செய்வது என்று புரியாமல் சித்தார்த் பரிதவித்து நிற்கிறார். பின் தன்னுடைய அம்மாவை விட சித்தப்பாவான சித்தார்த் மீது தான் அதிக பாசம் வைக்கிறார் அண்ணன் மகள். அதுமட்டுமில்லாமல் சித்தார்த்தை அவர் சித்தா என்று பாசமாக அழைக்கிறார். இதனால் சித்தார்த்திற்கும் தன்னுடைய அண்ணன் மகள் மீது அதிக பாசம் ஏற்படுகிறது. இதற்கிடையில் சித்தார்த் நிமிஷாவை காதலிக்கிறார்.

இப்படி இருக்கும் நிலையில் ஒருநாள் திடீரென்று குழந்தை காணாமல் போகிறது. ஏன் அந்த குழந்தை காணாமல் போனது? சித்தார்த் குழந்தையை கண்டுபிடித்தார்களா? சித்தார்த் அண்ணனின் இறப்பிற்கு காரணம்? என்பதே படத்தின் மீதி கதை.இதுவரை ரொமாண்டிக் பாயாக வந்த சித்தார்த் இந்த படத்தில் இதுவரை யாரும் பார்த்திராத கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார் என்றே சொல்லலாம். இதுவரை காணாத சித்தார்த்தை இந்த படத்தில் பார்க்கலாம். சித்தப்பா- மகள் இடையே இருக்கும் அழகான உறவை சித்தார்த் தன்னுடைய நடிப்பின் மூலம் சிறப்பாக காண்பித்து இருக்கிறார். இவரை அடுத்து படத்தில் அண்ணியாக வரும் அஞ்சலி நாயர், மகளாக வரும் சஹஷ்ரா ஸ்ரீ தங்களுக்கு கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள்.

படம் குறித்த தகவல்:

குறிப்பாக, சிறுமி சஹஷ்ரா ஸ்ரீ நடிப்பு பாராட்டை பெற்றிருக்கிறது. மேலும், சித்தார்த்திற்க்கு ஜோடியாக நிமிஷா வருகிறார். இவர் மலையாள நடிகை. இது தான் இவருக்கு முதல் படம் இருந்தாலும் இந்த முதல் படத்திலேயே ரசிகர்கள் மத்தியில் ஸ்கோர் செய்திருக்கிறார். இப்படி படத்தில் ஒவ்வொரு நடிகர்களும் தங்களது கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள் என்று சொல்வதை விட வாழ்ந்து இருக்கிறார்கள் என்று சொல்லலாம்.

நிகழ்ச்சியில் நடந்தது:

சித்தா படத்தின் வெற்றி விழாவானது சாலிகிராமத்தில் உள்ள பிரசாந்த் ஸ்டுடியோவில் நடைபெற்றது. இதற்காக பத்திரிக்கையாளர்கள் உட்பட பலரும் இரண்டு மணி நேரத்திற்கு மேலாகவும் அங்கு காத்திருந்தும் நிகழ்ச்சி தொடங்கப்படவில்லை என்று அதிருப்தியில் இருந்தனர். இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக அஞ்சனா அங்கு வந்து இருந்தார். அவர் பேச ஆரம்பித்த முதல் சித்தா படத்தை பற்றி முழுவதுமாக பேசிக் கொண்டிருந்தார்.

https://youtu.be/R5FFb4cLGBI?si=lXXFAlqmJjrll3nB

அங்கு வந்த சிறப்பு விருந்தினர்களை மேடைக்கு அழைக்காமல் படத்தின் படம் குறித்து பேசிக் கொண்டே இருந்தார். அங்கு இருந்த கேமரா மேன்கள் போதும் நீ பேசியது என்பதற்காக போல கைத்தட்டி பேச்சை முடிக்கும் படி சைகை காட்டினர். அதன் பின்பு என்ன செய்வது என்று தெரியாமல் தன்னுடைய பேச்சு சுருக்கமாக முடித்துக் கொண்டு நிகழ்ச்சிக்கு விருந்தினர்களை மேடைக்கு அழைத்தார். அதன் பின்பு நிகழ்ச்சி முடிந்த பெண் இந்த நிகழ்வு குறித்து பத்திரிக்கையாளர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார் அஞ்சனா.

Tamil Behind Talkies AMP · Quick view
View full